​முதுமையில் தனிக்குடித்தனம்

முதியோர்கள் தனிக்குடித்தனம் செல்வது இப்போது புதிய பேஷனாக உருவாகிக் கொண்டிருக்கிறது. குடும்பத்தை கட்டிக்காப்பாற்றி

எல்லா பொறுப்புகளையும் நிறைவேற்றிவிட்டு தளர்ந்துபோகும் முதியோர்கள் தங்கள் இறுதிக்காலத்தை தனிக்குடித்தனத்தில்

கழிக்காலம் என்று நினைக்கிறார்கள்.
எல்லா பொறுப்புகளில் இருந்தும் விலகி தனியாக வாழ்வதே இறுதிக்காலத்தில் நிம்மதி என்று கருகிறார்கள்.பணிசெய்து ஓய்வு பெற்ற கணவன் மனைவி இருவருமே குடும்ப பொறுப்புகளில் இருந்தும் ஓய்வு பெறவே விரும்புகிறார்கள். இதற்கானதிட்டமிடலை முன்கூட்டியே ஆரம்பித்து விடுகிறார்கள். வீடு கட்டும் போதும் தங்களுக்கு தனியாகவும், பிள்ளைகளுக்கு தனியாகவும்கட்டிக்கொள்கிறார்கள். அவரவர் குடும்பத்தை அவரவர் பார்த்துக்கொள்ளும் வகையில் முன்கூட்டியே திட்டமிடலுடன் வீட்டினைஅமைத்துக்கொள்கிறார்கள்.
இது ஒரு வகையில் நல்ல ஏற்பாடுதான்.வயதானால் வாழ்க்கைமுறையே மாறிவிடுகிறது. அவர்களுக்கு ஜீரண சக்தி குறைந்து போகிறது. அதனால் அவர்களுக்கு தனி சமையல்தேவைப்படுகிறது. அதாவது உப்பு, காரம் அதிகமில்லாமல் சமைக்கப்படும் உணவே அவர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. ஆனால் கூட்டுக்குடும்பத்தில் இருப்பவர்களுக்கு முதியோர்களுக்கு தனியாக சமைக்க அவர்கள் நேரமில்லை என்கிறார்கள். கூட்டுகுடும்பத்தில்இருக்கும் இளம் வயதினர் வயதானவர்கள் மீது தனிக்கவனம் செலுத்துவதை பெரிய வேலையாக கருதுகிறார்கள்.

..

அவர்களைபராமரிப்பதை ஒருவித எரிச்சலோடுதான் எதிர்கொள்கிறார்கள். இந்த நெருக்கடியான சூழ்நிலையை தவிர்க்கவே முதியோர்கள்

தனித்குடித்தனம் செல்ல விரும்புகிறார்கள். முதியோர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் தனிக்கவனம் செலுத்தவும் விரும்பியதை செய்து

சாப்பிடவும் தேவைப்படும் நேரத்தில் ஓய்வெடுக்கவும் மனநிறைவோடு நேரத்தை கழிக்கவும் தனிக்குடித்தனம் உதவுகிறது.
பணிகாலத்தில் ஓடிஓடி களைத்து போனவர்களுக்கு முதிய பருவத்தில் இந்த தனிக்குடித்தனம் முழுமையான ஓய்வைத்தருகிறது. காலத்திற்கேற்றபடி தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டால் தான் முதியோர்களால் நிம்மதியாக வாழமுடியும். இந்த ஏற்பாடு பெரும்பாலான முதியோர்களுக்கு பிடித்திருப்பதால் அவர்கள் தனிக்குடித்தனத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
வெளிநாடுகளில் வயதானவர்கள் பெரும்பாலும் தனித்து வாழவே விரும்புகிறார்கள். முதியோர்கள் தனிக்குடித்தனம் போய்விடுவதால்
குடும்ப உறுப்பினர்களிடையே உருவாகும் கருத்துவேறுபாடும் அதனைத்தொடர்ந்து உருவாகும் பிரச்சனைகளும் குறையும்.
தனிக்குடித்தனம் செல்லும் முதியோர்களிடம் விழிப்புணர்ச்சி அதிகமாகி விடுகிறது. நம்மை நாமே கவனித்து கொள்ள வேண்டும்.என்கிறபோது அவர்கள் ஆரோக்கித்திற்கு முக்கியத்தும் கொடுக்கிறார்கள். தங்களுக்கான வேலைகளை தாங்களே செய்து கொள்ளவேண்டும் என்கிற நிலை உருவாகும் போது சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். 
அதிகப்படியான பொறுப்புகளை தவிர்த்துக்கொள்வதால் சுதந்திர மனநிலையை அவர்களால் அடைய முடிகிறது. சுதந்திர உணர்வு அவர்களுக்கு தனி மகிழ்ச்சியை தருகிறது. அவர்களது ஆயுள் அதிகரிக்க அந்த மகிழ்ச்சியே ஆதாரம்.
வயதான தம்பதிகள் தனியாக இருப்பது பாதுகாப்பானதல்ல என்ற கருத்து நிலவுகிறது. இது உண்மைதான். பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு அவர்கள் தனிக்குடித்தனம் மேற்கொள்ள வேண்டும். அவர்கள் எந்த விலைஉயர்ந்த பொருளையும் வீட்டில் வைத்துகொள்ளாமல் எளிமையான வாழ்க்கை வாழவேண்டும்.
கூட்டுக்குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு கஷ்டம் ஏற்பட்டால் அதை அந்த வீட்டில் உள்ள முதியோர்களும் சேர்ந்து அனுபவிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதனால் முதியோர்களுக்கு கிடைக்க வேண்டிய முக்கியத்துவம் கிடைக்காமல் போய்விடுகின்றது.
வயதானவர்கள் தங்களை கவனித்து கொள்ள யாராவது அருகில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் எப்போதும் அது இயலாத காரியம் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. 
அதனால் விரக்கி, மனச்சோர்வு நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
தனிக்குடித்தனம் அவர்களுக்கு தன்னம்பிகையூட்டி உற்சாகத்தைகொடுத்து மனச்சோர்வை அகற்றி விடுகிறது. நமக்காக நாம் வாழ்ந்தாகவேண்டும் என்ற நிலைக்கு செல்கிறார்கள். நமக்கான தேவையை மற்றவர்கள் கவனித்து கொள்வார்கள் என்ற நிலையை மாற்றி, நம்மை நாமே கவனித்து கொள்ள வேண்டும் என்ற அக்கறை தனிக்குடித்தனம் செய்யும் முதிய தம்பதிகளுக்கு வந்துவிடுகிறது. இந்த சிந்தனை அவர்களை புத்துணர்ச்சியோடு வாழவைக்கும்.
தனிக்குடித்தனம் செலவு மிகுந்தது. பாதுகாப்பான முறையில் தனிக்குடித்தனம் நடத்த பணம் அதிகம் தேவைப்படவே செய்யும். அதை

ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும். இப்போது நடுத்தர வயதில் இருப்பவர்கள் தங்கள் எதிர்கால நலன் கருதி இப்போதே

முதிய தனிக்குடித்தனத்திற்கும் பணம் சேமிக்க வேண்டும்.

Leave a Reply