​நாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி எங்கே உள்ளது தெரியுமா?

😵😵😵😵😵😵😵
முப்பத்து முக்கோடி தேவர்களும் ஒரு சேர அமைந்த இடம் இதுதான். இந்த கோயில் பாதாள புவனேஸ்வரர் கோயில் என அழைக்கப்படுகிறது. இதுதான் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி என்று நம்பப்படுகிறது.

முழுக்க முழுக்க சுண்ணாம்பு பாறைகளால் கட்டப்பட்டுள்ளது இந்த கோயில். பல்வேறு குகைகள் வழி நீள்கிறது இந்த கோயில்.

சரி இந்த குகைகள் வழியே சென்றால் என்ன நிகழ்கிறது என்பதை காணலாம் வாருங்கள்.
😺

எப்படி இருக்கிறது தெரியுமா?

 

160மீ நீளமும், 90 மீ ஆழமும் கொண்ட இந்த கோயில் குகைகள் பல்வேறு வழிகளால் நீண்டு குறுகி காணப்படுகிறது.

 
 

இந்த பாதாள உலகத்திற்கு செல்லும் வழியைப் பற்றி கந்த புராணத்தில் முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது.

 
ஆன்மீகத் தேடலின் எல்லையற்ற பரம்பொருளின் இருப்பை யார் ஒருத்தர் உணர வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் சரையூ, ராம் கங்கா, குப்த கங்கா கரையில் இருக்கும் பாதாளபுவனேஸ்வர் கோயிலுக்கு வருமாறு அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
🎆

இயற்கையாக எழுந்த லிங்கங்கள்…….

 

இயற்கையாக எழுந்த லிங்கங்களாக எளிதில் கண்டறியமுடியாத உருவங்களாக, இக்கோயிலில் அமைந்திருக்கும் கடவுளர் உருவங்கள் சக்தியுகத்திலேயே தோன்றியதாம்.

 
 

சூரிய வம்சத்தை சேர்ந்த ரித்து பர்னா எனும் அரசன்தான் இந்த குகைகளையும், கோயில்களையும் கண்டறிந்துள்ளார்.

 
பாதாள புவனேஸ்வர் குகைக்கும் சிவபெருமானின் கைலாயத்துக்கும் இணைக்கும் வகையில் ஒரு சுரங்கப்பாதை இருப்பதாக நம்பப்படுகிறது. அதற்கான வழியும் கண்டறியப்பட்டுள்ளது.
🎆

உயிர் போகும் அபாயம்……

 

ஆனால் இந்த குகைகள் வழியே சென்று கைலாயத்தை அடைவது மிகவும் சிரமம். இதனால் உயிரிழப்புகளும் ஏற்படக்கூடும் எனக்கூறி இந்த சுரங்கத்தை அடைத்துவிட்டனராம்.

 
 

இந்த குகைகளின் பல இடங்களில் ஒரே ஒரு ஆள் மட்டுமே நுழையக் கூடிய அளவில் தான் வழி உருவாக்கப்பட்டிருக்கிறது.

 
 

சமீபத்தில்தான் முழு குகைக்கும் மின் இணைப்பு போடப்பட்டிருக்கிறது. இருந்தாலும் பல ஆழமான இடங்களில் இருட்டாக உள்ளது.

 
🎆

கண்டறியப்படாத ஆச்சர்யங்கள்…,…

 
இந்த பாதாள குகைகளுக்குள் இன்னும் கண்டறியப்படாத பல ஆச்சர்யங்கள் இருக்கிறது. அது மிகவும் அபாயகரமானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

 
பூமிக்கடியில் இன்னொரு உலகம் இது பாதாள உலகமா என்பது ஆன்மீக ரீதியில் தேடப்படவேண்டியது. பலருக்கு இதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், சுற்றுலாவுக்காகவாவது இங்கு தொடர்ந்து சென்றுகொண்டுதான் இருக்கின்றனர் மக்கள்.

 
எங்குள்ளது?
உத்தரகண்ட் மாநிலம் பித்தோர்கர்க் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த கோயில்.

வாகனத்தில் பயணிக்கும் வழி குகையிலிருந்து அரை கிலோமீட்டருக்கு முன்னர் நின்றுவிடுகிறது. அங்கிருந்து பொடிநடையாய் நடந்து சென்று குகையை அடையலாம்.

 
 

பூமியின் மையத்தை நோக்கு செல்லும் இந்த வழி உங்களை வேற்று உலகத்துக்கு அழைத்துச் செல்வதுபோன்றதொரு உணர்வை ஏற்படுத்தும்.

 
🚌🚌🚌

எப்படி செல்லலாம்?

 

தலைநகர் டெல்லியிலிருந்து மொராதாபாத் வழியாக நைனிட்டால் அருகேயுள்ள பாதாளபுவனேஸ்வர் கோயிலை அடையலாம்.

சென்னை, பெங்களூரு  உள்பட நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.

Leave a Reply