​கால்சென்டர் ஊழியர்கள்….

☎☎☎☎☎☎

இந்த கால்செண்டர்,பி.பி.ஓ வேலை பார்க்கும் இளசுகள் ரொம்பப் பாவம். வெளியிலிருந்து பார்ப்பவர்கள் இவர்களை ஏதோ பலான ஆசாமிகள் போல பார்ப்பார்கள். “கால் செண்டரா…ம்ம்ம்…ஜமாய் மச்சி” என நண்பர்கள் கிண்டலடிக்கவும் செய்வார்கள். உண்மையில் இந்த வேலை செய்பவர்களின் நிலமை ரொம்பப் பாவம். கஸ்டமர் என்ன மடத் தனமான கேள்வி கேட்டாலும் துளியூண்டு கூட எரிச்சல் காட்டாமல் அமைதியாகப் பதில் சொல்ல வேண்டும்.
“என்னய்யா எட்டுக்கால் பூச்சிக்கு எட்டு கால் இருக்கு ?” என யாராவது கேட்டால். “தேங்க்யூ பார் காலிங் சார்… நான் பாக்கறேன். ஏன் எட்டு கால் இருக்குன்னு…” என்று தான் பேச வேண்டும்.
அதை விட்டு விட்டு, “என்னய்யா வெண்ணை, எட்டுக் கால் பூச்சிக்கு எட்டு கால் தான் இருக்கும்..” என சொன்னீர்களென்றால் உங்கள் வேலை காலி. ஏன்னா கஸ்டமர் எவ்ளோ முட்டாளாய் இருந்தாலும், எவ்ளோ கத்தினாலும் நாம சைலண்டா, அமைதியா, பொறுமையா இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய பால பாடமே !
அதி பயங்கர மன அழுத்தத்தில் இருப்பவர்கள் இவர்கள் தான். எவ்வளவு கோபம் வந்தாலும் கோபத்தை வெளிக்காட்டாமல் சிரித்துக் கொண்டே பேச வேண்டும். அசிங்கமாகத் திட்டினால் கூட அமைதியாகத் தான் பதில் சொல்ல வேண்டும். இவர்கள் பெரும்பாலும் “இம்ப்ளோசிவ்” கேரக்டர்களாக இருப்பார்கள். அதாவது கோபத்தை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே வெடிப்பது. இவர்கள் தங்களைத் தாங்களே உற்சாகப் படுத்திக் கொள்ளாவிட்டால் பெரிய பெரிய நோய்களுக்குள் விழுந்து விடுவார்கள்.
அமெரிக்காவில் பகலாய் இருக்கும்போது நமக்கு இரவாகி விடுகிறது. அதனால் அப்படிப்பட்ட நாடுகளுக்கான சேவை செய்பவர்கள் முழுக்க முழுக்க இராக் கோழிகளாகி விடுவார்கள். தூக்கத்தையும் தொலைக்கவேண்டும், அவர்கள் பேசும் இங்கிலீஷையும் புரிந்து தொலைக்க வேண்டும், அவர்களுடைய கோபத்தையும் வாங்கி கட்டவேண்டும் என இவர்களுடைய வாழ்க்கை இருட்டைப் போலவே கஷ்டமானது.
ஆனால் நமக்கோ இவர்களெல்லாம் இளக்காரப் பிறவிகள். அடுத்த முறை யாராச்சும், “கிரெடிட் கார்ட் வேணுமா சார்” என போனில் கேட்டால் “உன்னைப் போல் ஒருவன்” மோகன் லால் போல வெடிக்காதீர்கள்.  வேணாம்மா.. சாரி. என அமைதியாய் சொல்லுங்கள். அவர்களும் நம்மைப் போல வாழ்க்கைக்காகப் போராடும் சராசரி மனிதர்களே.

Leave a Reply