​கலாச்சாரமும் நாகரீக பெண்களும்

பிரபல மாநகரத்தில் இருக்கும் ஒரு பெண்கள் கல்லூரி விழாவில் ஒரு சில பேச்சாளர் பெண்மணி கேட்ட ஒரு சில கேள்விகள்
.

யார் யாருக்கு சுயமாக சேலை கட்ட தெரியும்?

.

யார் யார் தன் இடது இடுப்பில் தண்ணீர் குடம் சுமந்து இருக்கிறீர்கள்?

.

வாசல் தெளித்து யார் யார் யாருக்கு கோலம் போட தெரியும்?

.

யார் யாருக்கு நன்றாக மீன் கறி வைக்க தெரியும்?

.

யார் யார் வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு துணையாக இருக்கிறீர்கள்?

.

உங்கள் கைகள் பூ போனறு மிருதுவாக உள்ளதா அல்லது உன் அம்மாவின் கையை போன்று கடினமாக உள்ளதா?

.

உன் செல்போனை ஒரு நாள் எவ்வளவு நேரம் உபயோகிக்கறாய்?

.

சன் மியூசிக் சேனலை எவ்வளவு நேரம் பார்க்க செலவு செய்கிறாய்?

.

உன் மனசாட்சியை தொட்டு சொல் இந்த ஜீன்ஸ் பேன்ட் டை நீயாக அணிகிறாயா அல்லது எல்லோரும் அணிகிறார்கள் நானும் அணிகிறேன் என்று அணிகிறாயா?

.

உண்மையில் இந்த இறுகிய ஆடைகள் உன் உடலுக்கு சவுகரியமாக உள்ளதா?

.

சமைக்க தெரியாமல் அல்லது சமைக்க நேரம் இல்லாமல் உணவக வாசலில் டோக்கனுக்காக காத்து நிர்க்கிறாயே இது சரியா?

.

கடவுள் தந்த அழகான உன் உடலை கண்ட கண்ட கரியை பூசி அசிங்க படுத்தி கொண்டு பார்ப்போரை கவர நினைக்கும் புத்தி சரியா என்ன?

.

நீ ஒரு பெண் இப்டி தா இருக்கணும் என்று உன் அம்மா சொல்லும் போது நாடு எங்கேயோ போகுது உனக்கு ஒரு மண்ணும் தெரியாது என்று உன் அம்மா விடம் சொல்லி விட்டு எவனோ ஒருவனுடன் ஓடி போவது முறையா என்ன?

.

பக்கத்து வீட்டு பையனிடம் சிரித்து விட்டு எதுத்த வீட்டு பையனை முறைத்து விட்டு பஸ்டாண்ட் ல் நிக்கும் பையனிடம் கை காட்டி விட்டு தன் வகுப்பு பையனை காதலத்துவிட்டு அடுத்தவகுப்பில் இருப்பவனுடன் படுத்து விட்டு அப்பா சொல் பவனை திருமணம் செய்வதற்க்கு பெயர் நாகரீகமா என்ன?

.

எல்லாரிடமும் ஒன்று போல் பழக வேண்டும் என்று அம்மா சொன்னது மறந்து விட்டதா என்ன?

.

ஒரு தமிழச்சி எப்படி அமர வேண்டும்?

.

ஒரு தமிழச்சி எப்படி பார்க்க வேண்டும்?

.

ஒரு தமிழச்சி எவ்வாறு உடுத்த வேண்டும்?

.

ஒரு தமிழச்சி எவ்வாறு பேச வேண்டும்?

.

ஒரு தமிழச்சி எவ்வாறு நடக்க வேண்டும்?

.

இது ஏதேனும் தெரியுமா என்று கேட்ட கேள்விகளுக்கு தலை குனிந்தவர்களாய் நிற்கிறார்கள் என் நாகரீக தமிழச்சிகள்

.

பேச்சாளர் பெண்மணி சொல்கிறாள் உன் அம்மா விடம் கேட்டு தெரிந்து கொள் என்று

.

தயவு செய்து அழகிய கலாச்சாரத்தை காப்பாற்றுங்கள்

.

என்று முடிக்கிறாள்!

      (படித்ததில் பிடித்தது)

Leave a Reply