வீரப்பன் நினைத்திருந்தால் நமீதாவைக் கடத்திருக்கலாம்

வீரப்பன் நினைத்திருந்தால் நமீதாவைக் கடத்திருக்கலாம்.

ஆனால் ராஜ்குமாரை கடத்தினார். எதற்கு பணத்திற்காகவா ? இல்லை. நடிகர் ராஜ்குமாரை கடத்தி அவரை விடுவிக்க வீரப்பன் வைத்த பத்துக் கோரிக்கைகள். படித்துக் பாருங்கள்.

கோரிக்கை 1: காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அதற்கு முன்பு, வி.பி.சிங் காலத்தில் அமைக்கப்பட்ட நடுவர் மன்றத்தின்இடைக்காலத் தீர்ப்பில் கூறியுள்ளபடி 205 டி.எம்.சி. காவிரி நீரை உடனடியாக தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும். எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினையில்,எந்தக் குழப்பமும் இருக்கக் கூடாது.

கோரிக்கை 2: 1991-ம் ஆண்டு காவிரிக் கலவரத்தில் இறந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும்.அத்துடன், கர்நாடகத் தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் தரப்பட வேண்டும்.

கோரிக்கை 3: கர்நாடகத்தில் கன்னடர்களுக்கு அடுத்து அதிகம் உள்ளது தமிழர்கள்தான். எனவே தமிழை கூடுதல் ஆட்சி மொழியாக கர்நாடக அரசுஅறிவிக்க வேண்டும்.

கோரிக்கை 4: பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையைத் திறக்க கர்நாடக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோரிக்கை 5: தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில அதிரடிப்படைகள் செய்த கொடுமைகள் குறித்து விசாரிக்க நீதிபதி சதாசிவா கமிஷன் அமைக்கப்பட்டது.இருப்பினும், இந்த கமிஷன் நியமனத்திற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடையை நீக்க கர்நாடக அரசு விரைவானநடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கமிஷன் அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும். பொதுமக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இதை வெளியிட வேண்டும்.மேலும், அதிரடிப்படை நடவடிக்கையின்போது உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூ. 10 லட்சமும், கற்பழிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ. 10லட்சமும் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பிறருக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். இந்தக் குற்றங்களுக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீதான புகார் நிரூபிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்.

கோரிக்கை 6: கர்நாடக ஜெயில்களில் தடா சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவிக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.

கோரிக்கை 7: கொல்லப்பட்ட 9 எஸ்.சி, எஸ்.டி மக்களின் குடும்பத்தினருக்கு போதுமான நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

கோரிக்கை 8: பச்சைத் தேயிலை பறிப்புக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச விலையை உடனடியாக ரூ. 15 ஆக அதிகரிக்க வேண்டும்.

கோரிக்கை 9: தமிழ்நாடு ஜெயில்களில் உள்ள 5 பேரை விடுவிக்க வேண்டும்.

கோரிக்கை 10: தமிழ்நாட்டில் மாஞ்சோலைத் தொழிலாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு முன்பு கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் உள்ள காபிமற்றும் டீ எஸ்டேட்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக் கூலியாக ரூ. 150 வழங்க வேண்டும்.

நண்பர்களுக்கும் பகிர மறவாதீர்கள்.

Leave a Reply