மீத்தேன் திட்ட எதிர்ப்பு

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வட்டம் வெள்ளக்குடி கீழத்தெருவை ஒட்டி ஓ.என்.ஜி.சி.-யின் எண்ணெய் சேகரிப்பு நிலையம் 1989-இல் நிறுவப்பட்டது. இன்று அந்த மக்கள் நோயாளிகள். சிறு வயதிலேயே இறந்து போகிறார்கள். தோல்நோய்களும், சுவாசக் கோளாறுகளும், உடலில் புண்ணும், மருந்து இல்லா நோய்களும் பீடித்து, வெள்ளக்குடி மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.செயராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சித்ரா ஜெயராமன், திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.செ.பாண்டியன், திருவாரூர் நகர ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் வெள்ளக்குடியில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
கைப்பம்பில் தண்ணீர் அடித்து அதில் குளித்த வெள்ளக்குடி மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பாருங்கள்!
”எங்களால் யாரும் பாதிக்கப்பட்டதில்லை” 

என்று மார்தட்டுகிறது ஓ.என்.ஜி.சி.

அதை வழி மொழிகிறது திருவாரூர் மாவட்ட நிர்வாகம்.
ஓ.என்.ஜி.சி-யை வெளியேற்றாவிட்டால், நிலத்தடி நீர் இதற்கு மேலும் பாதிக்கப்பட்டடால், நம் அனைவரின் நிலையும் இனி இதுதான்!

Leave a Reply