பெண் இன்ஜினீயருக்கு சாலையில் நேர்ந்த கொடூரம்..! அதிர்ச்சி வீடியோ

சென்னை துரைப்பாக்கத்தில் கடந்த 18ம் தேதி இரவு பொறியாளர் சிநேகலதாவிடம் இருந்து நகை, பணம் பறிக்க முயற்சி நடந்தது. அப்போது அவரை மளிகைக்கடைகாரர் சேகர் காப்பாற்றினார். இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் சிந்தாரிப்பேட்டையை சேர்ந்த மீன்குழம்பு கார்த்திக், அவரது கூட்டாளி அருணாசலம் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது கார்த்திக், மரணம் அடைந்தார். அவரை கொலை செய்து விட்டதாக கார்த்திக்கின் உறவினர்கள் நேற்று கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது நடந்த மோதலில் போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பெண் இன்ஜினீயர் சிநேகலதாவிடம் நகை பறிக்கும் சி.சி.டி.வி வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவை காண…

 

Leave a Reply