நாடு முழுவதும் மதுவிலக்கு? 30ம் தேதி முடிவு தெரியும்

நாடு முழுவதும், பூரண மதுவிலக்கை அமல் படுத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை, வரும், 30ல், விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞரும், பா.ஜ., பிரமுகரு மான அஸ்வினி குமார் உபாத்யாய், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியுள்ளதாவது:

அரசுகளின் கடமை


அரசியலமைப்பு சட்டத்தின்படி, பொதுமக்களின்

ஆரோக்கியம், உடல்நலத்தை பாதுகாக்க வேண்டி யது, மாநில அரசுகளின் கடமை. உடல் நலத்துக் கும், உயிருக்கும் ஆபத்தை விளைவிக் கக் கூடிய மதுபானங்கள் உள்ளிட்ட போதையை ஏற்படுத்தும் பொருட்களுக்கு தடைவிதிக்க வேண்டும்.குஜராத், பீஹார் மாநிலங்களில் பூரண மதுவிலக்கு அறிவிக்கப்பட்டு, சிறப்பாக நடைமுறைபடுத்தப் படுகிறது.

இதன் மூலம் மக்களின் உடல்நலம் பாதுகாக்கப் படுவதுடன், விபத்து ஏற்படுவதும், குற்றங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதுபோல் நாடு முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்; போதையைஏற்படுத்தும் பொருட்களுக் கும் தடை விதிக்க வேண்டும்.

ஆரோக்கிய தினம் :

நாடு முழுவதும், மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையை ஆரோக்கிய தினமாக அறிவித்து, மதுபானம் உள்ளிட்டவற்றால் ஏற்படும்

பாதிப்புகள் குறித்து பிரசாரம் செய்ய வேண்டும். போதைப் பொருட்களின் விளைவு கள் குறித்து, பள்ளி பாட திட்டத்திலும் சேர்க்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது. இந்த மனுவை, வரும், 30ல் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
– Dinamalar

Leave a Reply