நட்பு வட்டம்

​பாதிக்கப்பட்ட ஒரு உயிரின் எண்ணக் குமுறல்.

சில வார்த்தைகள் சற்று கடுமையாக இருந்ததால் சிறிது மாற்றியிருக்கிறேன்.
ஒரே வீட்டில் தான் இருக்கிறோம். 

ஆனாலும

நீயொரு திசையில் 

நானொரு திசையில்…!
அறை விளக்கை 

அணைத்தபின்னும் 

உன் முகத்தில் என்ன ஒளி வட்டம்?
உன் செல்போன் உலகிற்குள் 

நுழைந்துவிட்டாய் 
நான் …
 உன் உலகிலிருந்து 

வெளியேறிவிட்டேன்
வீட்டுக்குள்ளே நுழையும்போதே 

நோண்டிக்கொண்டே நீ வருவதால்…
நேற்று காலில் அடிபட்டு நான் 

நொண்டிக்கொண்டே போவது 

உன் கண்களில் படுவதாயில்லை…!
உன் கவனம் திருப்ப 

நான் செய்த முயற்சிகளெல்லாம் 

வீணாய் போவதேனோ?
உன் தொடுதிரை அழகிகள் 

போலல்லாது நான் 

சுமாராய் இருப்பதால்தானோ??
உன் செல்போன் என்ன ஊறுகாயா?

தொட்டுக்கொண்டே 

கொட்டிக்கொள்கிறாய்!!!
நான் உன் மனைவி! 
செல்போன்தான் உன் காதலி !!
அதன் முகம்(?) பார்த்துதான் 

அடிக்கடி சிரித்துக்கொள்கிறாய்..
அழுக்குத்துணி மூட்டை 
அழுதுகொண்டே குழந்தை 
அடுப்பில் தீயும் சட்டி 
அரை மணி நேரமாய் 

அரட்டையில் நீ…!
கையில் கிடைப்பதையெல்லாம் 

தூக்கிப்போட்டு உடைக்கவே 

நினைக்கிறேன். 
இருந்தாலும் செய்யமாட்டேன் 

கவலைப்படாதே…

நான் அவ்வாறு வளர்க்கப்படவில்லை…!
வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் 

உன் செல்போனால் நீ 

சாதித்ததுதான் என்னவோ?
வரும்போதே வட்ஸாப் 
பேஸ் வாஷ் பண்ணாமலே பேஸ்புக் 

மணிக்கணக்காய் 
யூடியூபில் வீடியோ 
இன்ஸ்டன்ட் போட்டோவுக்கு 

இன்ஸ்டகிராம் –
அதிலும் 

இன்ட்ரெஸ்ட் இல்லையானால் பின்டெரெஸ்ட்!!!
உனக்குத் தெரியுமா? 
நீ உன் பிரிய போனைப் பிரிவது 

இரண்டு சந்தர்ப்பங்களில்- 
ஒன்று உனக்கு கை வலிக்கவேண்டும்…!
இன்னொன்று கை வழுக்கவேண்டும்…!!
உன் போன் 

உன் குழந்தை 
இரண்டுமே ஒரே நேரம் சிணுங்கினால் 

எதனை முதலில் தூக்குவாய்?
என் ஆச்சரியமெல்லாம் 

என்ன தெரியுமா?
என் கை அகலமே இருக்கும் 

ஒரு சின்னப்பெட்டி 

எப்படி என் இடத்தை

பிடித்துக்கொண்டது என்பதுதான்…!
உன்போன்ற கணவர்களால், மனைவிகளால்

கண்ணீருடன் உறங்கிப்போகும் ஜீவன்கள்தான் எத்தனைபேர்…!
ஒன்று சொல்லட்டுமா..
பேசாமல் நீங்கள் 

உங்கள் போன்களையே

மணமுடித்திருக்கலாம்…!!!
குறிப்பு:-
இது பாதிக்கப்பட்ட பலருடைய நீண்ட கால வேண்டுகோள். 
பல 👱‍♀️பெண்களின்👱ஆண்களின் குரல்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான வார்த்தைகள் பாவிக்கமுடியாது போனதற்கு வருந்துகிறேன். 
ஏனென்றால் இதைவிட நாகரீகமான சொல்வது எப்படியென்று தெரியவில்லை…
💥நிதர்சனமான உண்மைதான்.
அதிகமாக முகநூலில் உலவும்ஆணோ,பெண்ணோ யாராக இருந்தாலும் சற்று சிந்திக்க வேண்டியது அவசியம் தான்.
 வேலைக்கு செல்வோர் ஓய்வு கிடைக்கும் நேரத்தில் தான் செல் போனை கையில் எடுக்க முடியும்.
ஆனாலும் 

முதலில் குடும்பம் பின்பு அரட்டை என நேரத்தை வகுத்துக் கொள்ள வேண்டும்.
தன்னைப் போலவே கணவனோ, மனைவியோ தானும் ஒரு மொபைலை எடுத்துக் கொண்டு அமர்ந்து விட்டால் விளைவுகள் விபரீதமாகி விடும் என்பது தின்னம்.
முடிந்த அளவு நட்பு வட்டம் சிறியதாக இருப்பதும்  நலம்.

Leave a Reply