சூப்

​மேற்கு நாட்டின் பழக்கத்துக்கு அடிமையாகும் அறிவாளித் தமிழினம். . .
அகோரப்பசியுடன் ஹோட்டலுக்குச் சென்றவுடன் சூப்பை ஆர்டர் செய்து,அதில் பெப்பரைப் போட்டு கொதிக்க கொதிக்க குடிக்கிறார்கள் வீரத்தமிழர்கள்!

இந்தப் பழக்கம் மேற்கத்திய நாடுகளின் குளிர்ப்பிரதேசங்களில்,இரவு நேரம் கடந்தும் வியாபாரம் பேசிக்கொண்டிருக்கும் போது பசியைத் தூண்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டது;

ஆனால்,நாம் ஏற்கனவே கொலைப்பசியில் இருக்கும் போது சூப்பைக் குடித்தால் கண்டிப்பாக கேஸ்டிக் அல்சர் உண்டு;

எது நமக்குத் தேவையான உணவு என்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்;
எதெற்கெடுத்தாலும் மேற்கு நாடுகளின் பழக்க வழக்கங்களை(டிவி பார்த்தோ,ஹாலிவுட் படங்கள் பார்த்தோ) காப்பியடித்து நமது உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது;
உடல் ஆரோக்கியம் பற்றிய அடிப்படையான உண்மைகள் இன்று டிவி விளம்பரங்களில் இல்லை;ஆரோக்கிய விழிப்புணர்வுக் கட்டுரைகளில் இல்லை;இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம்களில் மட்டுமே இருக்கின்றன;
வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு,இம்மாதிரியான முகாம்களில் கலந்து கொண்டால் மட்டுமே உடல் ஆரோக்கியம் பற்றிய முழு விழிப்புணர்வைப் பெற நம்மால் முடியும்;

Leave a Reply