சுவாதி படுகொலை வழக்கில் கைதான ராம்குமார் உயிரிழப்பு

சுவாதி படுகொலை வழக்கில் கைதான ராம்குமார்(26) சிறையில் தற்கொலை முயன்ற நிலையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சூளைமேட்டையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, ஜூன் 24-இல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரை ஜூலை 1-இல் போலீஸார் கைது செய்து சென்னையில் புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், புழல் சிறையில் மின்சாரம் பாந்துகொண்டிருந்த கம்பியை கடித்து தற்கொலைக்கு முயன்ற ராம்குமார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயரிழந்தார்

Leave a Reply