சவுக்கு

சென்னை உயர்நீதிமன்றம் இன்று மாவட்ட நீதிபதி, ஈஷா மையத்தில் ஆய்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.   
ஈஷாவுக்கு எதிராக ஒருவர் கூட குரல் கொடுக்காத நிலையில், முதன் முதலில் முழுமையான ஆதாரங்களோடு, ஈஷா மையம் மற்றும் திருடன் ஜக்கி வாசுதேவின் முகத்திரையை கிழித்தது சவுக்கு தளமே.  அதன் பிறகே, பரவலான விவாதப் பொருளானது ஈஷா.  
இன்று ஜுனியர் விகடன், மற்றும் நக்கீரன் இதழ்கள் அட்டைப்பட கட்டுரையாக ஈஷா மையத்தைப் பற்றி செய்தி வெளியிட்டுள்ளன என்பது மகிழ்ச்சியான செய்தி.    இதே விகடன் குழுமத்தின் ஆனந்த விகடன் பத்திரிக்கையில்தான் திருடன் ஜக்கி எழுதிய தொடர் வெளியாகி, அவனை பிரபலமடையச் செய்தது.  நக்கீரன் பத்திரிக்கையில் இணை ஆசிரியராக இருந்த காமராஜ் (தற்போது மின்னம்பலம் நடத்தி வருகிறார்) ஜக்கியின் விசுவாசமான அடிமை.   
நக்கீரன் காமராஜின் அழுத்தத்தால், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி ஈஷா மையத்துக்கு தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அளித்துள்ளார்.    அனுமதியின்றி கட்டப்பட்ட பல ஆயிரம் சதுர மீட்டர் கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது.  ஆனால் அதிமுக அரசாங்கமும் ஈஷா மையத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மீளா உறக்கத்தில் ஆழ்ந்துள்ளது.  
இன்று ஈஷா மையம் பரவலான விவாதப் பொருளாகி, பலராலும் விமர்சிக்கப்படுவது வரவேற்கத்தக்கது. 
ஈஷா குறித்து முதன் முதலில் முகத்திரையை கிழித்தது சவுக்கு தளம் என்பது உள்ளார்ந்த மகிழ்ச்சியை தருகிறது.    
சவுக்கு தளத்தில் வெளியான ஈஷா குறித்த கட்டுரைகளின் இணைப்பு 
https://www.savukkuonline.com/4455/
https://www.savukkuonline.com/7420/
https://www.savukkuonline.com/9223/
https://www.savukkuonline.com/4460/
https://www.savukkuonline.com/9401/

Leave a Reply