காஷ்மீர் மக்களின் துயரம்

காஷ்மீர் மக்களின் துயரம்!
காஷ்மீரில் ஜூன் 8 புர்ஹான் வானி கொலையின் பின்னர் 80-பதுக்கும் மேற்பட்ட காஷ்மீர்  மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான காஷ்மீர் இளைஞர்கள் பெல்லட் சிதற்ல்களால் கண்பார்வையை இழந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 3 மாதங்களாக வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறார்கள் காஷ்மீர் மக்கள். பாரமுல்லாவின் உரி முகாம் மீது பயங்கரவாதிகள்  இந்திய  இராணுவத்தின் மீது நடத்திய தாக்குதலில் 19 இராணுவத்தினர் கொல்லப்பட்ட நிகழ்வு காஷ்மீர் மக்களின் துயரத்தை  பின்னுக்குத்தள்ளி விட்டது. காஷ்மீர் எல்லையில் இரு நாடுகளும் படைகளைக் குவித்து வைக்கின்றன.  இந்த யுத்த ஆரவாரங்கள் அல்லது  தங்களை இராணுவ ரீதியாக பலப்படுத்தும் நிகழ்வுகளுக்கு மத்தியில் காஷ்மீர் நீதிமன்றம் பெல்லட் குண்டுகளை பயன்படுத்த தடையில்லை என்று கூறி விட்டது. இதுவரை சுமார் 200 பேர் பெல்லட்டால்  பார்வையிழந்து விட்டார்கள். இப்போது உரி தாக்குதல் பெல்லட்டை பாதுகாத்து விட்டது. பெல்லட் கன்களால் காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியிலிருந்து ஆட்சியாளார்களை பயங்கரவாதிகள் காப்பாற்றி விட்டார்கள் என்று கூட சொல்லலாம்!

Leave a Reply