காலை நாளிதழ் செய்திகள் செப்டம்பர் 28, புதன்

​📰 காலை நாளிதழ் செய்திகள்📰

     🗓செப்டம்பர் 28, புதன்🗓

➖➖➖➖➖➖➖➖➖➖➖

தமிழ்ச்சொல் அறிவோம்
வேன் – மூடுந்து

➖➖➖➖➖➖➖➖➖➖➖

முதல்வர்கள் கூட்டத்தில் எடப்பாடி பங்கேற்கிறார்.. ஜெ.வின் உரை தயார்…அப்பல்லோவில் அதிரடி ஆலோசனை!
காவிரியில் 3 நாட்களுக்கு 6,000 கன அடிநீரை திறக்க கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு
காவிரி தீர்ப்பு… கர்நாடகத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்
உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலி.. பெங்களூரில் செப்.30 வரை நீடிக்கிறது தடையுத்தரவு! போலீஸ் குவிப்பு
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக மைசூரு, மாண்டியா, ஹூப்ளியில் போராட்டம் வெடித்தது – பதற்றம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தேவையற்றது – மோடிக்கு கர்நாடக எம்.பி.க்கள் கடிதம்
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்தார் காம்பீர் !
சார்க் மாநாட்டில் மோடி பங்கேற்கமாட்டார்.. வெளியுறவுத் துறை அமைச்சகம்
ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் – திருநாவுக்கரசர் வேண்டுகோள்
யூரி தாக்குதல்: பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து ஆதாரங்களை அளித்தது இந்தியா
உள்ளாட்சி தேர்தல்: பாமக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
உள்ளாட்சித் தேர்தலில் உற்சாகத்துடன் உழைத்திடுக.. தொண்டர்களுக்கு கருணாநிதி வேண்டுகோள்
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நிறைவேறிய இந்து திருமண மசோதா!
காவிரி டெல்டா விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஸ்டாலின்
தமிழகம்-கர்நாடக முதல்வர்களுடன் மத்திய அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்த சுப்ரீம்கோர்ட் உத்தரவு
காவிரி… கர்நாடகத்திற்கு காங். மேலிடம் பகிரங்க ஆதரவு.. தமிழக விவசாயிகள் அதிர்ச்சி
கைவிட்ட திமுக….. உள்ளாட்சித் தேர்தலில் தமாகா தனித்துப் போட்டி: ஜி.கே.வாசன்
ராஜ்யசபா எம்.பி.யாகிறார் இல. கணேசன்…. மத்திய அமைச்சராகவும் வாய்ப்பு?
வாழ்நாள் முழுவதும் தேச நலனுக்காக அர்பணித்தவர் இல. கணேசன் – பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா, இல்லையா? கர்நாடக அமைச்சரவை இன்று முடிவு
செவ்வாய் கிழமை குரு ஓரையில் 919 அதிமுக வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல்
உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் சாதி, மத பிரச்சினையை தூண்டக்கூடாது – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
வேலூரில் பயங்கரம்… 75 வயதான மூதாட்டி பலாத்கார முயற்சியில் கொலை- குடிகாரன் கைது
கர்நாடக சட்டசபை தீர்மானத்தை தூக்கி குப்பையில் போட்ட சுப்ரீம் கோர்ட்.. பரிசீலிக்க கூட மறுப்பு!
உச்சநீதிமன்ற உத்தரவை மீறிய கர்நாடகா மீது ஆர்டிகிள் 142-ன் கீழ் நடவடிக்கை.. தமிழக அரசு வாதம் இதுதான்!
முதல் அதிபர் வேட்பாளர்கள் விவாதம்: வழக்கம் போல் வாயாடிய ட்ரம்ப்… அசத்திய ஹிலரி
கச்சத்தீவு அருகே 2,000 தமிழக மீனவர்களை துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டியடித்த சிங்கள கடற்படை!
100 வயது மூதாட்டி பலாத்காரம் செய்து படுகொலை…பஞ்சாபில் பயங்கரம்!
63-வது பிறந்த நாள் கொண்டாட்டம் மாதா அமிர்தானந்த மயிக்கு பிரதமர் மோடி புகழாரம்
லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான பி.கே. பன்சால் மகனுடன் தற்கொலை
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை அவசரகதியில் வெளியிட்டது ஏன்? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
வீடியோ பதிவு மூலம் விளக்கம் அளிக்க வேண்டும்; உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஜெயலலிதாவுக்கு, டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
சென்னையில் 10 பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன் கைது பேஸ்-புக்கில் பெண்களின் ஆபாச படங்களை வெளியீட்டு மிரட்டல்
தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை துவங்கியது
பொள்ளாச்சி: லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி
புதுச்சேரி அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி
விழுப்புரம்: 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு சம்பவம்; தாளாளர், ஆசிரியை கைது
சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணிப்பது துரதிருஷ்டவசமானது : பாக்
ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, ஹெலிகாப்டரில் பார்வையிட்டார்.
டில்லியில் காவல் துறையை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்ற ஆம் ஆத்மி கட்சியின் கோரிக்கை நியாயமற்றது – காங்கிரஸ்
டில்லியில் வகுப்பறையில் ஆசிரியரை குத்தி கொலை செய்த பிளஸ் 2 மாணவர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
தரவரிசையில் அஸ்வின் 2-ம் இடத்துக்கு முன்னேற்றம்!
அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சம்ஸ்கிருதம் திணிப்பு, குருகுலக் கல்விக்கு புதுவை மாநில அரசு எதிர்ப்பு: முதல்வர் நாராயணசாமி
நேற்று கூகுளின் 18வது பிறந்தநாள்: டூடுல் வெளியிட்டு முகப்பு பக்கத்தை அலங்கரித்தது கூகுள்
உலகில் 90 சதவீதம் பேர் அசுத்த காற்றை சுவாசிக்கின்றனர்: சுகாதார அமைப்பு அறிக்கை
உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து மு.க.ஸ்டாலின் உடன் காதர்மொய்தீன் சந்திப்பு
வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால் தேர்தலுக்கு பிறகுதான் வழக்கு தொடர முடியும் : மாநில தேர்தல் ஆணையம் அதிரடி
அடுத்த மாதத்தில் இருந்து சிறிய எல்இடி டிவி விலை அதிகரிக்க வாய்ப்பு: கையை கடிக்குமா தீபாவளி பட்ஜெட்?
சுஷ்மா சுவராஜின் பேச்சு பொய்களின் தொகுப்பு: ஐ.நா. கூட்டத்தில் பாகிஸ்தான் அபாண்டமான பதில்
தமிழக அரசு தான் விரும்பும்படி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளது: #திருமாவளவன் குற்றச்சாட்டு!
அதிமுக வேட்பாளர் பட்டியல் தயார் செய்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது: திருநாவுக்கரசர்!
”சாதி என்னும் அசிங்கத்தை, கலாச்சாரம் என்ற பெயரில் தோளில் சுமந்து திரிகிறோம்”! கர்நாடக இசைப்பாடகர் டி.எம் கிருஷ்ணா
தமிழகத்திலேயே முதன்முறையாக குருடம்பாளையம் ஊராட்சியில் அரசின் சார்பில் இலவச Wifi சேவை அளிக்கப்பட்ட கிராமம்
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு உதகையில் உற்சாக கொண்டாட்டம்!
விமான நிலையம் கோயம்பேடு இடையே நேரடியாக மெட்ரோ ரயில்கள் ஓரிரு மாதங்களில் இயக்கம்: கட்டணத்தை குறைக்க பயணிகள் வலியுறுத்தல்
ஊரப்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் சிஎம்டிஏ ஒப்பந்தப்புள்ளி விளம்பரம் வெளியிடப்பட்டது
ரயில் நிலையங்களைத் தொடர்ந்து வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் இலவச வைஃபை சேவையை வழங்க கூகுள் நிறுவனம் முடிவு

Leave a Reply