கவாள சேவை

தமிழ்நாட்டின் கோயமுத்தூர் மாவட்டம் மாதம்பட்டி குப்பனூரில் உள்ள சாமியார் ஒருவர் தன்னிடம் குழந்தை வரம் கேட்டு வரும் பெண்களுக்கு விசித்திரமான முறையில் பரிகாரம் செய்து வைப்பதாக கூறப்படுகிறது.

வரும் பெண்கள் அவரிடம் காணிக்கையாக வாழைப்பழங்களைக் கொடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. அதன் பின் அவர்கள் கொடுத்த வாழைப்பழத்தை வாயில் உண்ணும் அவர் தன் வாயிலிருந்து அந்த பெண்ணின் வாய்க்கு பழத்தை ஊட்டி விடுவாராம்.

இந்த பரிகார முறைக்கு கவாள சேவை என்று கூறப்படுகிறது. பெண்களுக்கு மட்டும் தான் இந்த பரிகாரம் செய்யப்படுமாம்.

இது பற்றி அறிந்த சமூக ஆர்வலர்கள் சிலர் சாமியாரைத் தேடி வரும் பெண்களிடம், இது மோசடி வேலை என்று எடுத்துக்கூறியுள்ளனர். இருந்தாலும், சாமியாருக்கு தாய்க்குலத்தினர் மத்தியில் இருக்கும் செல்வாக்கு குறையவே இல்லை என்று கூறப்படுகிறது.


Related News

  • அம்பானிக்கு உடம்பெல்லாம் மூளை
  • நட்பு வட்டம்
  • காஸ்ட்லியான சரக்கு
  • ​நாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி எங்கே உள்ளது தெரியுமா?
  • பிரைவசி
  • ​கால்சென்டர் ஊழியர்கள்….
  • ​செடி, கொடி போன்ற தாவரங்களுக்கும் உயிர் உண்டுதானே அதை சாப்பிடுவதும் பாவம்தானே?
  • கிருஷ்ணகிரி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய பிரம்ம கமலம்!
  • Leave a Reply