எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்

எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்!

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

கடும் மூச்சுத்திணறல் காரணமாக எழுத்தாளர் பாலகுமாரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,அவர் மரணமடைந்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருகாட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்ற கிராமத்தில் கடந்த 1946ம் ஆண்டு பிறந்தவர் பாலகுமாரன். இவர், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், இருநூற்றுக்கும் அதிகமான நாவல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய நாவல்களில் மெர்க்குரி பூக்கள், இரும்பு குதிரைகள் உள்ளிட்டவை மிகவும் பிரபலம். பல்வேறு விருதுகளையும் அவர் வாங்கி இருக்கிறார்.இரும்பு குதிரை நாவலுக்கு சாகித்திய அகாதமி விருதுபெற்றார்.ரஜினிநடித்த பாட்ஷாபடத்தில் ’ஒருதடவ சொன்னா நூறு தடவ சொன்னமாதிரி’ என்ற வசனத்தை எழுதியவர் .

குணா, ஜென்டில் மேன் உள்ளிட்ட பல படங்களில் வசனகர்த்தாவாகவும் அவர் பணியாற்றி உள்ளார். 82 வயதான பாலகுமாரன் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு நேற்றி நள்ளிரவு திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் எழுத்தாளர் பாலகுமாரன் இன்று இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு பல்வேறு எழுத்தாளர்களும், வாசகர்களும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

One comment

Leave a Reply