என் மகளையே டேட்டிங் செய்திருப்பேன் – டிரம்ப்

என் மகளையே காதலித்திருப்பேன்: சர்ச்சையை கிளப்பிய டொனால்ட் டிரம்ப்

படத்தில் டிரம்ப் தன் மகளுடன்

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் டிரம்ப் பெண்களை அவமதிக்கும் வகையில் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் இஸ்லாமியர்களை மட்டும் குறி வைத்து விமர்சனம் செய்யவில்லை.

தேர்தலில் போட்டியிட்டபோதும், அதற்கு முன்னதாகவும் பெண்கள் குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பல்வேறு தரப்பினரை பாதித்துள்ளது.

பெண்களுக்கு எதிராக டிரம்ப் பேசிய சர்ச்சைக்குரிய 10 கருத்துக்கள் இதோ!

1. சக போட்டியாளரான Carly Fiorina என்பவரை பற்றி…!

குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதியாக HewlettPackard நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான Carly Fiorina என்பவரை பற்றி டிரம்ப் பேசியபோது, ‘அந்த பெண்ணின் முகத்தை பாருங்கள். இந்த் முகத்திற்கா நீங்கள் வாக்களிப்பீர்கள்? இந்த முகமா நமது அடுத்த ஜனாதிபதி?’ என அவருடைய உருவத்தோற்றத்தை அவமதித்து டிரம்ப் பேசியுள்ளார்.

2. பெண் செய்தியாளர் Megyn Kelly பற்றி பேசியபோது!

டிரம்ப் ஓரிணச்சேர்க்கையாளர்களுக்கு எதிரானவர் என்பதால் Fox News செய்தியாளரான Megyn Kelly என்பவர் நேரலை நிகழ்ச்சியில் டிரம்பிடம் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மற்றொரு செய்தி நிறுவனத்தில் டிரம்ப் பேசியபோது, ‘அந்த நேரத்தில் Megyn Kelly மாதவிடாய் காலத்தில் இருந்துள்ளார். அதனால் தான் என்னிடம் கடுமையான கேள்விகளை கேட்டுள்ளார். அவருடைய மூக்கிலும் மற்ற உறுப்பிலும் ரத்தம் வந்ததை பார்த்தீர்களா?’ என தரக்குறைவாக பேசியுள்ளார்.

3. பத்திரிகை நிறுவனரான Arianna Huffington என்பவரை பற்றி….!

அமெரிக்காவில் வெளியாகும் Huffington பத்திரிகை நிறுவனரான Arianna என்பவரை பற்றி டிரம்ப் வார்த்தையில் கூறமுடியாத அளவிற்கு குரூரமாக பேசியுள்ளார்.

’ Arianna-வின் உள்ளுறுப்புகளும் வெளி உறுப்புகளும் பார்க்க சகிக்கவில்லை. இவரை விட்டுவிட்டு மற்றொரு ஆண் மகனை தேடி அவரது கணவர் ஏன் சென்றார் என்பது எனக்கு இப்போது தான் நன்றாக புரிகிறது’ என பேசியுள்ளார்.

4. ஹிலாரி கிளிண்டன் பற்றி பேசியபோது..!!

அமெரிக்க ஜனாதிபதியாக ஹிலாரிக்கு தகுதி இல்லை. ஏனெனில், அவரது கணவரான பில் கிளிண்டனுக்கு நிறைய ரகசிய உறவுகள் இருந்துள்ளது. ஹிலாரி இதற்கு உடந்தையாக இருந்தாரா எனத் தெரியவில்லை. ஆனால், தனது கணவர் மீது பாலியல் புகார் கூறும் பெண்களை ஹிலாரி படுமோசமாக தாக்கியுள்ளார்.

5. ஒட்டுமொத்த பெண்களை பற்றி டிரம்ப் பேசியபோது

தொழில் சார்ந்த பல்வேறு கூட்டங்களில் டிரம்ப் பங்கேற்றபோது பெண்களின் அந்தரங்க உறுப்புகளை டிரம்ப் தொட்டு பேசியுள்ளார்.

‘பொதுமக்கள் மத்தியில் நீங்கள் ஒரு பிரபலமாக இருந்தால், பெண்களை எங்கு வேண்டுமானாலும் தொடலாம்’ என அதற்கு விளக்கமும் அளித்துள்ளார்.

6. Rosie O’Donnell என்ற கொமடி நடிகையை பற்றி பேசியபோது..!!

’ரோஸி மிகவும் காட்டுமிராண்டித்தனமானவர். கொடூரமானவர். ஒருவேளை, அவருடைய நிகழ்ச்சியை நான் நடித்தினால் அவருடைய அந்தரங்க உறுப்புகளை நேருக்கு நேராக பார்த்து ‘உனக்கு இனிமேல் வேலை கிடையாது’ எனக் கூறியிருப்பேன்.

7. தன்னுடைய சொந்த மகளான ஈவான்கா டிரம்ப் பற்றி பேசியபோது

கடந்த 2006-ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் டிரம்பின் மகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது, ‘எனது மகள் மிகவும் அழகும் கவர்ச்சியும் மிக்கவர். ஒருவேளை, ஈவான்கா என்னுடைய மகளாக இல்லாமல் இருந்திருந்தால், அவரையே நான் டேட்டிங் செய்திருப்பேன்…ஆனால், இப்போது நான் அவருடைய தந்தை’ என கூச்சமின்றி பதிலளித்துள்ளார்.

8. தொழிலதிபரும், மொடலுமான Paris Hilton பற்றி பேசியபோது

Paris Hilton-ஐ 12 வயது முதல் எனக்கு தெரியும். இவருடைய பெற்றோரும் எனக்கு நல்ல பழக்கம். ஒருமுறை அவருடைய வீட்டிற்கு சென்றபோது பாரீஸ் ஹில்டன் ஒரு அறைக்குள் சென்றதை பார்த்தேன். ‘வாவ்…..யார் இந்த கவர்ச்சியான……அடடா, அவருடைய 12 வயதில் எனக்கு இந்த எண்ணம் வந்திருக்க கூடாது’ என உளறியுள்ளார்.

9. பெண் செய்தியாளர்களை பற்றி பேசியபோது..!

கடந்த 1991-ம் ஆண்டு பெண் செய்தியாளர்களை பற்றி பேசியபோது ‘என்னை பற்றி பத்திரிக்கைகளில் அவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்பது முக்கியமில்லை. ஆனால், என்னை பேட்டி எடுக்கும்போது அவர்களுடைய உடலமைப்புகள் எப்படி இருக்கிறது என்பது தான் முக்கியம்’ என பேசியுள்ளார்.

10. பால் கொடுக்கும் தாயாரை பற்றி பேசியபோது…!

நீதிமன்றத்தில் டிரம்ப் மீதான ஒரு வழக்கு விசாரணையின்போது Elizabeth Beck என்ற பெண் வழக்கறிஞர் ஒரு அவசர இடைவெளி வேண்டும் எனக் கேட்டுள்ளார். ஆனால், டிரம்ப் அதற்கு மறுத்துவிட்டார். தனது 3 வயது குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும் எனக் கூறியபோதும் அனுமதி கிடைக்கவில்லை.

இறுதியாக, நீதிமன்றத்திலேயே தனது மார்பகங்களை வெளியே எடுத்து ‘குழந்தைக்கு பால் கொடுக்க தான் அவகாசம் கேட்கிறேன்’ எனக் கூறிய பிறகு ‘நீ மிகவும் மோசமானவள்’ எனக் கண்டித்துவிட்டு டிரம்ப் அனுமதி அளித்துள்ளார்.

lankasri News

Leave a Reply