அரசியல், ஜாதி – மதம், பணம் எதுமே இல்லாத இந்தியாவின் சிறிய டவுன்

அரசியல், ஜாதி – மதம், பணம் எதுமே இல்லாத இந்தியாவின் சிறிய டவுன் பற்றி உங்களுக்கு தெரியுமா?
ஆரோவில், தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச டவுன்.
 புதுச்சேரி பக்கத்தில் அமைந்துள்ளது இந்த அழகிய சிறிய டவுன் பகுதி.
இப்போது இந்த ஆரோவில் மத்திய அரசின் மேற்பார்வையில் உள்ளது.
 இங்கு தான் அரசியல் இல்லை, ஜாதி-மதம் இல்லை, பணம் இல்லை. ஆனால் இங்கு மனிதம், மனித நேயம், நல்ல மனிதர்கள், அன்பு உள்ளங்கள், கருணை போன்றவை அளவில்லாமல் இருக்கிறது….
எந்த ஜாதி, மத நாட்டின் கோட்பாடும் இன்றி, மனிதம் மற்றும் அன்பும் கருணையும் நிலைத்து ஒங்க வேண்டும் என்பதற்காக ஸ்ரீ அரவிந்த் அன்னையால் தோற்றுவிக்கப்பட்ட இடம் தான் ஆரோவில்.
 மாத்ரி மந்திர்!
ஆரோவில்-ன் இதயம் / ஆன்மா என மாத்ரி மந்திர் பகுதியை கூறலாம். மாத்ரி மந்திர் என்றால் வடமொழியில் அன்னையும் ஆலயம் என்றும் பொருள். இந்த இடத்தில் தெய்வ சிலைகள் இல்லை, பூஜை வழிபாடுகள் செய்யும் பழக்கம் போன்ற எவையும் இல்லை.

இந்த இடத்தில் பெரும் அமைதி நிலவும். இந்த இடத்தில் ஒரு ஐந்து நிமிடங்கள் அமர்ந்திருந்தால் நீங்கள் முழு அமைதியை பெற முடியும்.
 124 நாடுகள்!
ஆரோவில் கட்டப்பட்ட போது 124 உலக நாடுகளில் இருந்து மண் கொண்டுவரப்பட்டு கட்டப்பட்டது.
 சுய வேலை!
இங்கு ஒருவர் கூட வேலை செய்யாமல் உணவருந்த மாட்டார்கள். அனைவருக்கும் வேலை உண்டு.

வயல், விவசாயம், சோளம், பழத்தோட்டம், சுத்தம் செய்வது என இங்கு இருக்கும் மக்கள் அனைவரும் அனைத்து வேலைகளையும் எந்த முகசுளிவும் இன்றி செய்து வருகின்றன
 விடியல் நகரம்!
ஆரோவில் கடந்த 1986-ம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆரோவில் நகரை விடியலின் நகரம் என்று கூறுவார்கள்.

யுனெஸ்கோ இந்நகரை ஒரு சர்வதேச நகரம் என பாராட்டியுள்ளது. ஆரோவில் பன்னாட்டு மக்களின் உழைப்பு மற்றும் உதவியில், இந்திய அரசின் ஆதரவில் இயங்கி வருகிறது.
 50 நாடுகள்!
ஆரோவில்-ல் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல்வேறு கலாச்சாரத்தை பின்பற்றி வந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சர்வதேச சமூகம் இதை மனிதத்தை உணர ஒரு பயிற்சி தரும் இடம் என கூறியிருக்கிறது.
    அமைதி 

அனைவரும் ஒன்றிணைந்து ஒரு இடத்தில் அமைதியாக வாழ முடியும் என்றால் அதற்கு எடுத்துக்காட்டாக திகழும் இடம் ஆரோவில். ஆம், பணம், அரசியல், ஜாதி – மதம் இல்லாத இடம் அமைதியாக தானே இருக்கும்.

Leave a Reply