அட்ராசக்க.. மோடி பிளான் பக்கா…

நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்துள்ளார். ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற டிசம்பர் 30 ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக வரும் 9 மற்றும் 10 ம் தேதி ஆகிய இரு நாட்களும் வங்கி ஏ.டி.எம். செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 
அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள், இடுகாடுகள் ஆகிய இடங்களில் மட்டும் வரும் நவம்பர் 11ம் தேதி வரை ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும், 2005 க்கு முன்பு வரை அச்சிட்ட நோட்டுக்களை மட்டும் மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இனி 500, 1000 நோட்டுகள் செல்லாது. புது நோட்டுகளை மாற்ற டிசம்பர் 31.12.2016 கடைசி தேதியாம். அதிகமாக பணத்தை மாற்ற வருபவர்களுக்கு வருமான வரித்துறை ரைடு வரும் அபாயம்.. 

Leave a Reply