உண்ணும் உணவில் ரசம் சேர்த்தால்

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு சமையல் தான் ரசம். இத்தகைய ரசம் தென்னிந்தியாவில் வடை பாயாசத்துடன் கொடுக்கப்படும் ஒவ்வொரு விருந்திலும் அவசியம் இருக்கும். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு வீட்டிலும் மதிய வேளையில் ரசம் அவசியம் சமைத்து சாப்பிடப்படுகிறது.

 

சரி, மதிய வேளையில் உண்ணும் உணவில் ரசம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? ஆம், சாப்பிடும் போது சிறிது ரசம் சேர்த்துக் கொள்வதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. இதற்கு காரணம் அதில் சேர்க்கப்பட்டுள்ள மசாலாப் பொருட்கள் தான். மேலும் ரசத்திலேயே நிறைய வெரைட்டிகள் உள்ளன.

 

பலருக்கு மதிய வேளையில் ரசம் இல்லாவிட்டால் சாப்பாடே வயிற்றில் இறங்காது. இங்கு அத்தகைய ரசத்தை அன்றாடம் சிறிது உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

 

வயிற்றுப்போக்கை சரிசெய்யும்
ரசமானது வயிற்றுப்போக்கு, அசிடிட்டி, வாயுத் தொல்லை, செரிமான பிரச்சனை போன்றவற்றில் இருந்து உடனடி நிவாரணம் வழங்கக்கூடியவை. மேலும் இது மிகவும் விலை குறைவில் வேகமாக செய்து சாப்பிடக்கூடிய சமையலாதலால், தவறாமல் சிறிது உணவில் சேர்த்து வாருங்கள்.
புற்றுநோய் தாக்கத்தைக் குறைக்கும்
அற்புதமான மற்றொரு நன்மை என்னவெனில், ரசம் உட்கொண்டு வந்தால், புற்றுநோயின் தாக்கம் குறையும். இதற்கு முக்கிய காரணம், ரசத்தில் சேர்க்கப்பட்டுள்ள மஞ்சள் மற்றும் மிளகு தான். இவையே புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.
மலச்சிக்கலைத் தடுக்கும்
பெரும்பாலானோருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், உண்மையில் ரசத்தை அன்றாடம் சேர்த்து வந்தால், குடலியக்கம் சீராக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம். அதிலும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படும் போது, சூடாக ஒரு கப் ரசம் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். இதற்கு முக்கிய காரணம் ரசத்தில் சேர்க்கப்பட்டுள்ள புளி தான்.
நோயாளிகளுக்கு நல்லது
நோயாளிகள் ரசத்தை எடுத்துக் கொள்வது நல்லது. உதாரணமாக, காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், அத்தகையவர்கள் காய்கறிகள் சேர்க்கப்பட்ட ரசம் சாதத்தை உட்கொண்டு வந்தால், அதில் சேர்க்கப்பட்டள்ள பொருட்கள், உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரோட்டீனை அதிகரித்து, உடலை விரைவில் குணமாக்கும்.
ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் நிறைந்தது
ரசத்தில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. பலருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ரசத்தில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிகம் நிறைந்த புளி இருப்பதால், அது சருமத்திற்கு மிகவும் நல்லது.
பிரசவ காலத்தில் நல்லது
கர்ப்பிணிகள் கூட ரசத்தை உட்கொள்ளலாம். ஏனெனில் அதில் புரோட்டீன், வைட்டமின், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இதர கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் ரசம் குடலியக்கத்தை சீராக இயக்கும். இதனால் கர்ப்ப காலத்தில் சந்திக்கும் பல பிரச்சனைகள் குறையும்.
வைட்டமின்கள் நிறைந்தது
ரசத்தில் முக்கியமான வைட்டமின்களான ரிபோப்ளேவின், நியாசின், வைட்டமின் ஏ மற்றும் சி, ஃபோலிக் ஆசிட் மற்றும் தியாமின் போன்றவைகள் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் தான் இது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.
கனிமச்சத்துக்கள் நிறைந்தது
ரசத்தில் கனிமச்சத்துக்களான மக்னீசியம், காப்பர், செலினியம், ஜிங்க், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. ஆகவே அன்றாடம் இதனை சிறிது உணவில் சேர்த்து வந்தால், உடலில் ஒருசில குறைபாடுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
குழந்தைகளுக்கும் நல்லது
ரசம் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய திட உணவுகளில் முக்கியமானது. குழந்தைகளுக்கு ரசம் சாதம் கொடுப்பதால், அவர்களின் செரிமானம் சீராக நடைபெற்று, அவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கும். மேலும் பெரும்பாலான குழந்தைக்கு முதன்முதலில் கொடுக்கும் திட உணவுகளில் முதன்மையானது ரசம் எனலாம்.
எடையைக் குறைக்க உதவும்
அன்றாடம் ரசத்தை உணவில் சேர்த்து வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம். எப்படியெனில் ரசம் சேர்ப்பதால், உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் வெளியேறும். அதிலும் அந்த டாக்ஸின்களானது வியர்வையின் மூலமாகவும், சிறுநீரின் வழியாகவும் வெளியேறும்.

Leave a Reply