​வீட்டுக் குறிப்புகள்

தயிரில் ஒரு சிறிய துண்டு தேங் காயைப் போட்டு வையுங்கள். தயிர் சீக்கிரமே புளித்துப் போகாமலிருக்கும்.

 உங்கள் வீட்டு ஃபிளாஸ்க் பழையது மாதிரி ஆகி விட்டதா? அதனுள் கொஞ்சம் சோப்புத் தண்ணீரையும், நியூஸ் பேப் பரையும் போட்டு வையுங்கள். பதினைந்து நிமிடங்கள் கழித்துக் குலுக்கிக் கழுவினால் உள்ளே புத்தம் புதிது போலப் பள பளக்கும். 
வீட்டிற்கு விலை உயர்ந்த மார்பிள் கற்களைப் பதித்துள்ளீர்களா? அவற்றைக் கொஞ்சம் பால் கொண்டு துடைத்திட பளபளப்பாகவும், கறைகளின்றியும் இருக்கும். 

தேங்காய் வெளிப்புறத்தில் வெள்ளையாகவும், அதன் குடுமிப் பகுதிகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிய படியும் இருக்க வேண்டும். அப்போது தான் அது இள சானதாக இருக்கும். இல்லையென்றhல் முற்றியதாகவோ, கொப்பரையா கவோ இருக்கும். 

தேங்காயை உடைத்த அன்றே துருவி ஒரு பாட்டில் அல்லது டப் பாவினுள் போட்டு இறுக மூடி வைத்து விடுங்கள். நான்கைந்து நாட்களுக்குக் கெடாமல் இருக்கும். ஃப்ரிட்ஜனுள் வைப்பதால் தேங்காய் இறுகித் துருவவே முடியாமல் போவதும் தவிர்க்கப்படும். 

எலுமிச்சம் பழங்களை வெந்நீரில் கொஞ்ச நேரம் போட்டு வைத்திருந்து விட்டுப் பிழிந்தால் இரண்டு மடங்கு சாறு கிடைக்கும். 

எலுமிச்சம் பழச்சாறும், பன்னீரும் கலந்த தண்ணீரால் வாயைக் கொப்பளிக்க, வாய் நாற்றம் நீங்கும்
ஜின்ஸ் பேண்ட்டுகளைத் துவைக்கும் போது, கடைசியாக அலசும் தண்ணீhpல் கொஞ்சம் வினிகர் கலந்து அலசினால் சாயம் போகாமலிருக்கும். 

செலோடேப் பின் நுனியைக் கண்டு பிடிக்க முடிய வில்லையா? அதை சிறிது நேரம் பிரிட்ஜினுள் வைத்து எடுத்தால்

சுலப மாகப் பிரிக்க வரும். 

உடலில் எங்கேயாவது ரொம்பவும் அரிக்கிறதா? அந்த இடத்தில் ஐஸ் கட்டியை வைத்துத் தேயுங்கள். அரிப்பு பறந்து போகும். 
சில துளிகள் நெயில் பாலிஷ ரிமூவரை எடுத்துப் பஞ்சில் நனைத்து வீட்டின் சன்மைக்கா சுவிட்சு போர்டுகளைத் துடைக்க, அவை புதிது போலப் பள பளக்கும். 
அவசரத்திற்குக் காய மறுக்கும் கைக்குட்டைகள், உள்ளாடைகள் போன்றவற்றை உங்கள் வீட்டு இஸ்திரிப் பெட்டி அல்லது சமையல் பாத்திரம் எதையாவது சூடாக்கி, அதன் மேல் பரப்பி வைத்து விடுங்கள். ஐந்தே நிமிடங்களில் பட்டாகக் காய்ந்து விடும். 
வேர்க்கடலை வறுப்பதற்கு முன்பாக அவற்றை லேசாக நனைத்துப் பிறகு வறுத்தால், ஒரே மாதிரி  நிறத்தில் வறுபடும். தோலும் சீக்கிரமே வந்து விடும். 
கொண்டைக் கடலை போட்டுக் குழம்பு வைக்கப் போகிறீர்களா? முதல் நாள் இரவே அதை ஊறவைத்து விட்டு, மறுநாள் வறுத்து விட்டுக் குழம்பு வைத்தால் சீக்கிரமே வெந்து விடும். 
குளோப் ஜாமூன் செய்ய ரெடி மேட் மிக்ஸை உபயோகிப்பதற்குப் பதிலாக மைதா மாவுடன் கொஞ்சம் பனீரைக் கலந்து பிசைந்து செய்தால் அதிக சுவையுடன் இருக்கும். பிரெட் டின் ஓரங்களை 

நீக்கி விட்டு, அதன் வெள்ளை நிறப் பகுதிகளையும் சேர்த்துப் பிசைந்து செய்யலாம்.
பயனுள்ள வீட்டுக் குறிப்புகள் !!!
 

1. வாழைக்காயை ப்ரிஜ்ஜில் வைக்கும் போது, அப்படியே வைக்காமல், இரண்டாக கட் பண்ணி வைத்தால் வாழைக்காய் கருப்பாகாமல் அப்படியே புதியது போல் இருக்கும்.

2. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது இரண்டு ஸ்பூன் நல்லெண்ணய்யை சூடு பண்ணி, மாவு பிசைந்தால் மிருதுவாக வரும்.

3. டீ தயாரிக்கும் பொழுது, அதனுடன் தேவையான சக்கரையைச் சேர்த்தால் டீ நல்ல நிறமுடன் இருக்கும்.

4. முருங்கைக்காய் குழம்பிற்கு துண்டு துண்டாய் நறுக்கும் போது ஒவ்வொரு துண்டிலும் கத்தியால் ஒரு கீறு கீறினால் அதன் உள்ளே குழம்பின் உப்பு காரம் இறங்கும்.

5. பிஞ்சுக் கத்தரிக்காய் ஸ்டப்புடு பொரியல் செய்யும் போது காம்பை வெட்டாமல் அதன் எதிர்பாகத்தில் நான்கு துண்டுகளாக வெட்டி உள்ளே பொடியை வைத்தால் நல்ல ருசியாக இருக்கும்.

6. தயிர்ச்சாதம் செய்வதற்கு குக்கரில் அரிசியுடன் தண்ணீர் சேர்க்கும் போது, அதனுடன் ஒரு டம்ளர் பால் சேர்த்து வைக்கும் போது நன்றாகக் குழைந்து வரும்.

7. துவரம் பருப்பு குக்கரில் வேக வைக்கும் போது, அதனுடன் இரண்டு சில்லு தேங்காய்ப் பத்தையை சேர்த்தால் நன்றாக பருப்பு வெந்து விடும்.

8. பாகற்காய் வறுவல் செய்யும் போது, காயை எண்ணெய்யில் நன்றாக வறுத்து பின்னர் உப்பு, காரம் போட்டால், கெடாமல் நாளைக்கு மொறுமொறுப்பாக இருக்கும்.

9. உள்ளிப் பூண்டை சீக்கிரம் உரிக்க, ஒரு வாணலியை நன்றாக காய்ந்ததும் உரிக்க வேண்டிய பூண்டை போட்டால் படபடவென தோல் எல்லம் வந்து விடும்.

10. வாழைக்காய் வறுவல் செய்யும்போது, ஒரு சிறிய ஸ்பூனில், நீர்மோரை எண்ணெய்யில் விட்டால் வாழைக்காய் கருக்காமல் வறுபடும்.

Leave a Reply