​தேன் மிட்டாய் செய்யும் முறை 

தேவையான பொருள்கள் :
புழுங்கல் அரிசி – 4 கப்

முழு உளுந்து – ஒரு கப்

சீனி – 4 கப்

தண்ணீர் – ஒரு கப்

ஆரஞ்சு அல்லது சிவப்பு கலர்

எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை :
1.அரிசி மற்றும் உளுந்தை கழுவி 2 முதல் 3 மணி நேரங்கள் வரை ஊற வைக்கவும்.
2.அரிசி, உளுந்து ஊறியதும் மிக்ஸியில் போட்டு குறைவான தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
 (இட்லி மாவு பதத்தை விடவும் சிறிது கெட்டியாக இருப்பது நல்லது)
3.அரைத்து வைத்திருக்கும் மாவுடன் ஆரஞ்சு கலர் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
4.ஒரு பாத்திரத்தில் சீனியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். சீனி கரைந்து கொதிக்கும் நிலையில் அடுப்பை அணைத்து விடவும்.
5.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த மாவு கலவையை சிறிய கரண்டியால் எடுத்து ஊற்றவும்.
6. உருண்டைகள் பொரிந்து மேலே வரும்.
7.பொரித்த உருண்டைகளை மிதமான சூட்டில் உள்ள சர்க்கரை பாகில் போட்டு 5 நிமிடங்கள் ஊற விடவும்.
8.ஊறியதும் மிட்டாயை வேறோரு தட்டிற்கு மாற்றவும். ஆறியதும் சுவைக்கவும்.

சுவையான நாவில் ஊறும் தேன் மிட்டாய் ரெடி.






Related News

  • ​கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சோர்வை போக்கும் உணவுகள்
  • ​திண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்
  •  தினம் ஒரு கலந்த சாதம்
  • ​நீங்கள் சைவம் என்று நினைத்து சாப்பிடும் இந்த உணவுகள் உண்மையில் அசைவம் என தெரியுமா?
  • பழைய சாதம்
  • பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதின் காரணம்
  • பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதின் காரணம்
  • ​ஸ்ரீரங்கம் வத்த குழம்பு
  • Leave a Reply