​சூப்பரான மிளகு முட்டை வறுவல் 

​சூப்பரான மிளகு முட்டை வறுவல் செய்யும் முறை ..?
தேவையான பொருட்கள் :
முட்டை – 3 

பெரிய வெங்காயம் – 1(பெரியது )

பச்சை மிளகாய் – 1

கறிவேப்பிலை – 1 கொத்து 

மிளகுதூள் – 1 ஸ்பூன் 

சோம்புத்தூள் – 1 ஸ்பூன் 

கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு – தேவைக்கு 
செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முதலில் முட்டையை  வேகவைத்து, ஆறியதும் தோல் உரித்து, இரண்டாக வெட்டி தனியே வைத்துக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் சிறிது வதங்கியதும் மிளகுத்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்கு வதங்கியதும் இதனுடன் முட்டையும் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும்.
* இதுபோல இரண்டு பக்கமும் திருப்பி வேகவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கி சூடாக பரிமாறவும்.
* தயில் சாதம், சாம்பார் சாதத்திற்கு சிறந்த சைட் டிஷ் இது.

Leave a Reply