வேப்பம்பூ சாதம்

உடலுக்கு நன்மை தரும், நோய்களை தீர்க்கும் வேப்பம்பூ சாதம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். 
தேவையான பொருட்கள் :
உதிராக வடித்த சாதம் – ஒரு கப்,

காய்ந்த மிளகாய் – 4,

கறிவேப்பிலை, வேர்க்கடலை – சிறிதளவு,

காய்ந்த வேப்பம்பூ – ஒரு டேபிள்ஸ்பூன்,  

உளுத்தம்பருப்பு, கடுகு, மஞ்சள்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,

புளி – கோலிகுண்டு அளவு,

நெய் – ஒரு டீஸ்பூன்,

எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.  
செய்முறை:
* வாணலியில் நெய் விட்டு, வேப்பம்பூவை வறுத்து எடுக்கவும்.
* உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், வேர்க்கடலை மூன்றையும் சிறிதளவு எண்ணெயில் வறுத்து ஆறவைக்கவும். ஆறியதும் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
* வடித்த சாதத்தை ஒரு அகன்ற பாத்திரத்தில் போடவும்.
* வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மஞ்சள்தூள் சேர்த்து இறக்கி, சாதத்தில் சேர்க்கவும்.
* வறுத்த வேப்பம்பூ, அரைத்த பொடி இரண்டையும் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.
* உடலுக்கு மிகவும் நல்லது இந்த சாதம். வாரம் இருமுறை செய்து சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது.

Leave a Reply