வெள்ளரி பயன்கள்

வெள்ளரி பயன்கள்!
*வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்துக்கு 

ஒரு முறை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிக்காய் சாறு 

அருந்தினால், புண் சட்டெனக் குணமாகும்.
*காலரா நோயாளிகள் வெள்ளரிக் கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதில் இளநீரையும் கலந்து, ஒரு மணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்தலாம்.
*சர்க்கரை நோயாளிகள் எடை குறைய, விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாறை அருந்த வேண்டும்.
*வெயிலைத் தவிர்க்க தயிரில் வெள்ளரிக்காய், காரட், பீட்ரூட், தக்காளி, முள்ளங்கி இவற்றைத் துருவிச் சேர்த்து வெஜிடபிள் சாலட் செய்து சாப்பிட்டால், குளிர்ச்சியாக இருக்கும்.
*முகத்தில் உள்ள கரும் புள்ளிகள், பருக்களை அகற்ற வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்துக் கழுவினால், முகம் பொலிவு பெறும்.
*தலைமுடியில் வெள்ளரிச் சாறு, கேரட் சாறு, பசலைக் கீரைச் சாறு, பச்சடிக் கீரைச் சாறு தலா இரண்டு டேபிள்ஸ்பூன் சேர்த்து தடவி அலசலாம். முடிகொட்டுவதும் நின்றுவிடும்.
*செரிமானக் கோளாறு, கபம், இருமல், நுரையீரல் பிரச்னை இருப்பவர்கள் வெள்ளரிக்காய் சாப்பிடுவது நல்லதல்ல.

#விகடன்

Leave a Reply