வெண்டைக்காய் பொரியல்

வெண்டைக்காய் நிறைய பேருக்கு பிடிக்காது. வெண்டைக்காயில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம். 
தேவையான பெருட்கள் :
வெண்டைக்காய் – 200

வெங்காயம்  –  1

மிளக்காய் தூள்  – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

கடுகு –  1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை  – சிறிது

உப்பு  –  தேவையான அளவு

தேங்காய் துருவல் –  1 டேபிள் டீஸ்பூன்

எண்ணெய்  – 2 டேபிள் டீஸ்பூன்
செய்முறை :
* முதலில் வெண்டைக்காயை கழுவி தண்ணீர் காயும் வரை வைத்து நறுக்கிகொள்ளவும். அதனை ஒரு கடாயில் போட்டு (எண்ணெய் ஊற்றக்கூடாது) லேசான தீயில் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
* பின்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கிய கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்தபின் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி மூடி வைக்கவும்.
* பின் திறந்து பிரட்டி விட்டு அடிபிடிக்காமல் வதக்கவும்.
* கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.
* வெண்டைக்காய் பொரியல் ரெடி.  

    

குறிப்பு : வெண்டைக்காய் பொரியலை சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

Leave a Reply