வெஜிடபிள் அடை

​சர்க்கரைவள்ளி கிழங்கு – மிக்ஸ்ட் வெஜிடபிள் அடை செய்யும் முறை ..?
தேவையான பொருட்கள் :
சர்க்கரைவள்ளி கிழங்கு – ஒன்று

முள்ளங்கி – 2 

கேரட் – ஒன்று 

வெங்காயம் – இரண்டு 

பச்சை மிளகாய் – 4

இஞ்சி – ஒரு துண்டு

மிளகு தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன் 

உப்பு – தேவையான அளவு 

ஆலிங் ஆயில் அல்லது எண்ணெய் – தேவைக்கு
செய்முறை :
* சர்க்கரைவள்ளிக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
* முள்ளங்கி, கேரட்டை துருவிக்கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ப.மிளகாய், இஞ்சியை அரைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் மசித்த சர்க்கரைவள்ளிக்கிழங்கை, துருவிய முள்ளங்கி, கேரட், வெங்காயம், அரைத்த  ப.மிளகாய், இஞ்சி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொட்டியாக பிசைந்து கொள்ளவும்.
* ஒரு வாழை இலை அல்லது பொலிதீன் ஷீட்ல இந்த பிசைந்த கலவையை தேவையான அளவு உருட்டி கையால் அடை போல தட்டி கொள்ளவும்.
* ஒரு நான் ஸ்டிக் தவாவில் சிறிது எண்ணெய் விட்டு அடையை போட்டு சிறிய தீயில் நிதானமாக இரண்டு பக்கமும் பொன்னிறமாக வரும்வரை வேகவைத்து எடுக்கவும்.
* மிக்ஸ்ட் வெஜிடபிள் அடை ரெடி.
* புதினா அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிடவும்.

Leave a Reply