விளாம்பழ துவையல்

விளாம்பழ துவையல் செய்யும் முறை
தேவையான பொருட்கள் :
விளாம்பழம் – 2 (தசையை எடுத்துக்கொள்ளவும்)

கொத்தமல்லி தழை – 1 கைபிடிஅளவு

காய்ந்த மிளகாய்  – 2

உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி

கடலைபருப்பு – 1/2 தேக்கரண்டி

உப்பு –  தேவைக்கு

நல்லெண்ணெய்  –  2 தேக்கரண்டி
செய்முறை :
* வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாய், பருப்பு வகைகள், கொத்தமல்லி தழை போன்றவைகளை கலந்து வதக்குங்கள். 
* வதங்கியவற்றை ஆறவைத்து அத்துடன் விளாம்பழம் கலந்து, உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
* இதை சாதம் மற்றும் இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.

Leave a Reply