வாழைத்தண்டு – பார்லி சூப்

சத்தான வாழைத்தண்டு – பார்லி சூப்  செய்யும் முறை 
தேவையான பொருட்கள் :
வாழைத்தண்டு – 1

பார்லி – 50 கிராம்

தக்காளி – 1

இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

அரிசி – 1 கைப்பிடி

பருப்பு – சிறிதளவு

நெய் – 1/2 ஸ்பூன்

மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு
செய்முறை :
* வாழைத் தண்டை நார் எடுத்து சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள்.
* தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெட்டிய வாழைத்தண்டுடன் அரிசி, பருப்பு, பார்லி தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள்.
* வெந்ததும் தண்ணீரை வடித்துக் கொள்ளுங்கள்.
* நெய்யில் காய்ந்த மிளகாய், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கிக் கொள்ளுங்கள்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் வடித்து வைத்திருக்கும் நீரை விட்டு நன்றாகக் கொதிக்க விடுங்கள்.
* கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி தேவையான உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறுங்கள்.
* சத்தான, சுவையான வாழைத்தண்டு – பார்லி சூப் ரெடி.

Leave a Reply