வாழைக்கிழங்கு

சத்துக்கள் நிறைந்த ‘வாழைக்கிழங்கு’
‘வாழைக்கிழங்கு’… நம்மில் பெரும்பாலோர் இதைக் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டோம்.
வாழைமரத்தின் அடிப்பகுதியில் இருக்கும் இந்தக் கிழங்கு, காய்கறிச் சந்தைகளில் கிடைக்கும். கூட்டு, பொரியல், அவியல், கிழங்கு மசாலா என எதுவும் இதில் சமைக்கலாம். ஏராளமான சத்துக்கள் நிறைந்தது. இது ஒரு மருந்தும்கூட. ஆனால், மருந்தாகப் பயன்படுத்த வாழைக்கிழங்கு மட்டும் போதாது. அந்தக் கிழங்கு வாழைமரத்திலேயே இருக்க வேண்டும். வாழைமரத்தின் அடிப்பகுதியில் உள்ள கிழங்கில் சிறிய துளையிட வேண்டும். அந்தத் துளையின் அடியில் ஒரு கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் கொஞ்சம் சீரகத்தைப் போட்டு துணியால் மூடி வைத்துவிட வேண்டும். காலையில் பார்த்தால் கிழங்கில் இருந்து சொட்டிய நீர் பாத்திரத்தில் சேகரமாகியிருக்கும். சீரகம் கலந்த அந்தத் தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், சிறுநீரகக் கல் பிரச்னை வெகுவாகக் குறையும்; ரத்தம் சுத்தமாகும்; இதயம் பலமாகும்; உடல் நச்சுக்கள் முறியும்; ஈரல் பலமாகும்; சூடு குறைந்து உடல் வலுப்பெறும்.
-நல்ல சோறு

ஆனந்த விகடன்

Leave a Reply