வயிற்றுப்புண்ணை ஆற்றும் வேப்பம்பூ ரசம்

தேவையான பொருட்கள் :

புளி – நெல்லிக்காய் அளவு
வேப்பம்பூ – 1/2 கப் (காய்ந்தது)
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையானது

அரைக்க :

மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2

தாளிக்க :

கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

* வேப்பம்பூவை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும்.

* புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் வறுத்த வேப்பம்பூவை சேர்க்கவேண்டும்.

* அரைக்கக் கொடுத்துள்ளவைகளை லேசாக எண்ணெயில் வறுத்து விழுதாக அரைத்து அதையும் கொதிக்கும் ரசத்தில் சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும்.

* நன்றாக கொதித்த பின் கடுகு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் வேண்டும்.

* சத்தான வேப்பம்பூ ரசம் ரெடி.

Leave a Reply