மாலை நேர ஸ்நாக்ஸ் பிரெட் பஜ்ஜி

மாலை நேர ஸ்நாக்ஸ் பிரெட் பஜ்ஜி எப்படி செய்வது என்று பார்ப்போமா ..?
தேவையான பொருட்கள் :
கடலை மாவு – 1 கப்

அரிசி மாவு – ¼ கப்

பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

ஓமம் – ½ தேக்கரண்டி

சாட் மசாலா தூள் – ¾ தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

தண்ணீர் – தேவையான அளவு

பிரட் துண்டுகள் –  5

எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா தூள், ஓமம் சேர்த்து தண்ணீர் ஊற்றி கிளறவும். 
* பின் சமையல் சோடா ஒரு சிட்டிகை சேர்த்து மாவை நன்றாக கிளறி வைக்கவும். 
* பிரட் துண்டுகளை சதுரமாக வெட்டி வைக்கவும்.
* அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் பிரட் துண்டை எடுத்து கலக்கி வைத்துள்ள மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பிரெட் பஜ்ஜி தயார்.

Leave a Reply