மாப்பிள்ளை சம்பா

வறட்சியை தாங்கி விளையக்கூடிய “மாப்பிள்ளை சம்பா’ என்னும் நெல் ரகம், ஏழு அடி உயரத்தில் வளரக் கூடியது. அதிகளவு மாவு சத்து காணப்படுவதால், சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த ரக அரிசி மிகவும் பிடிக்கும். இந்த அரிசியில் சமைக்கப்படும் சாப்பாடு எளிதில் கெட்டுப்போகாது. ஏக்கருக்கு 40 முதல் 50 மூட்டைகள் வரை சாகுபடி கிடைக்கும். சிறப்பு வாய்ந்த இந்த நெல் ரகத்தை, ராமாநாதபுரம் அருகே சின்ன அக்கிரமேசி விவசாயி கிருஷ்ணன், சாகுபடி செய்து சாதித்து வருகிறார்.

அவர் கூறியதாவது: இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறிய அறிவுரைபடி, நான்கு மாதங்களுக்கு முன்னர், ஒரு ஏக்கரில் “மாப்பிள்ளை சம்பா’ சாகுபடி செய்தேன். அவ்வப்போது, விட்டு விட்டு பெய்யும் மழையில், தற்போது ஆறரை அடி உயரம் வரை பயிர் வளர்ந்து, நெல் மணிகள் கொத்து கொத்தாக தொங்குகின்றன. பூச்சி தாக்குதல் இல்லை. உரச் செலவும் கிடையாது. மற்ற பயிர்கள் எல்லாம், மழை இன்றி வாடும் நிலையில், இந்த ரகம் மட்டும் பச்சை பசேல் என, வளர்ந்துள்ளது.

 

Leave a Reply