மதுரை ஸ்பெஷல் கரண்டி ஆம்லெட் ரெசிபி!

மதுரை ஸ்பெஷல் கரண்டி ஆம்லெட் ரெசிபி!
?????????????
கரண்டி ஆம்லெட் ரெசிபி மதுரையின் மற்றுமொரு அடையாளம். வழக்கமான ஆம்லெட் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும் முட்டைப் பிரியர்களுக்கு கரண்டி ஆம்லெட் ரெசிபி கொஞ்சம் மாறுதலாக இருக்கும். சுவையான கரண்டி ஆம்லெட் எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.!

.
தேவையான பொருட்கள்.!

முட்டை-1
, சின்ன வெங்காயம் – கைப்பிடி,
கொத்தமல்லி,
கறிவேப்பிலை,
மிளகுத் தூள் – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
..
செய்முறை.!

முதலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மிளகுத் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளுங்கள்.

பின்னர் பெரிய குழி கொண்ட கரண்டியை அடுப்பில் வைத்து, இப்பொழுது அதில் லேசாக எண்ணெய் தடவுங்கள்.

பின்பு சிறிதளவு முட்டைக் கலவையை ஊற்றுங்கள்.

சிறிது நேரம் கழித்துத் திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுங்கள் விருப்பபட்டோர் குழிப்பணியாரச் சட்டியிலும் இதைச் செய்யலாம். இப்பொழுது மிருதுவாக இருக்கும்

சுவையான கரண்டி ஆம்லெட் தயார்.

Leave a Reply