மஞ்சள் அடை

*மஞ்சள் அடை / Manjal Adai*

கீழக்கரை ஸ்பெஷலான இந்த வித்தியாசமான மஞ்சள் அடையை நீங்களும் செய்து பாருங்க. சூப்பர் மணம்,ருசி.

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 2 கப்
முட்டை – 1
தேங்காய்ப்பால் – 3 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – சிறிது
பச்சை மிளகாய் – 2
கருவேப்பிலை – சிறிது
மல்லி இலை – சிறிது
உப்பு , எண்ணெய் – தேவைக்கு

அரைக்க:

தேங்காய்த்துருவல் – :2 டேபிள் ஸ்பூன்
சோம்பு- 1 டேபிள்ஸ்பூன் ( உங்க ருசிக்கு தக்க)
மஞ்சள் பொடி – அரை டீஸ்பூன்

செய்முறை:

தேங்காய்த்துருவலுடன் மஞ்சள் தூள் உப்பு சோம்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்

தேங்காய்ப்பாலில் உப்பு முட்டை சேர்த்து கலக்கி அரிசி மாவை சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைக்கவும்.

அரைத்த விழுது மற்றும் வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் மல்லி இலை அனைத்தையும் மாவுடன் நேர்த்து சுமார் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

மாவின் பதம் இட்லிமாவு பதத்தில் இருக்க வேண்டும்.

தவாவில் எண்ணெய் விட்டு குழிக்கரண்டியால் அடையாக ஊற்றவும்

மேற்புறம் முறுகலானதும் திருப்பிப்போடவும்.

எடுத்து சூடாகப் பரிமாறவும்.

சுவையான மஞ்சள் அடையை குருமா,கிரேவியுடன் பரிமாறலாம்.

Leave a Reply