மசாலா முட்டை பன்னீர் புர்ஜி

​குழந்தைகளுக்கு விருப்பமான சுவையான மசாலா முட்டை பன்னீர் புர்ஜி எப்பிடி செய்வது என்று பார்ப்போமா ..?
தேவையான பொருட்கள் :
வெங்காயம் – 1

தக்காளி – 1

பச்சை மிளகாய் – 4 

சோம்பு – சிறிதளவு

வெண்ணெய் – சிறிதளவு

பன்னீர் – 200 கிராம்

உப்பு – சுவைக்கு

முட்டை – 3 (வெள்ளைக்கரு மட்டும்)

கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பன்னீரை துருவிக்கொள்ளவும்.
* ஒரு வாணலியில் வெண்ணெய் போட்டு அது உருகியவுடன் சோம்பு போட்டு தாளித்த பின் அதில் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும். 
* வெங்காயம் நன்றாக வதங்கிய பின் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* இரண்டும் நன்றாக வதங்கிய பின் துருவிய பன்னீர் சேர்க்கவும்.
* அடுத்து அதில் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.
* பூ போல உதிரியாக வந்ததும் அதில் கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.
* சுவையான மசாலா முட்டை பன்னீர் புர்ஜி ரெடி.

Leave a Reply