பிரெட் மெதுவடை

​இலகுவாக மாலை நேர ஸ்நாக்ஸ் பிரெட் மெதுவடை  எப்பிடி செய்வது என்று பார்ப்போமா ..?
தேவையான பொருட்கள் : 
பிரெட் ஸ்லைஸ் (சால்ட் பிரெட்) – 10, 

ரவை – 5 டீஸ்பூன், 

வெங்காயம் – 2

பச்சை மிளகாய் – 2 

கொத்தமல்லித்தழை – சிறிதளவு, 

எண்ணெய், உப்பு – தேவையான அளவு. 
செய்முறை: 
* பிரெட்டின் ஓரங்களை வெட்டி எடுத்துவிட்டு, பிரெட்டை சிறிய துண்டு வெட்டிக் கொள்ளவும்.
* வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் பிரெட் துண்டுகள், ரவை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, சிறிதளவு தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையவும். 
* கடாயில் எண்ணெய் சூடானதும் பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக்கி, தட்டி நடுவே ஓட்டை போட்டு, சூடான எண்ணெயில்  பொரித்தெடுக்கவும்.
* சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் பிரெட் மெதுவடை ரெடி.

Leave a Reply