பால் பெருகச் செய்யும் அருமருந்துகள்

தாய்ப்பால், நோய் எதிர்ப்பாற்றல் தரும் என்ற செய்தி நாம் அறிந்ததே. பிரசவிக்கும் வரை பெண்ணின் குடல் பகுதியில் இருந்தபடி ‘ஏதாச்சும் கிருமி வருதா?’ என்று கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்த நோய் எதிர்ப்பாற்றல்கொண்ட ஆன்ட்டிபாடிகள் எல்லாம், பிரசவித்த மறுகணத்தில் பெண்ணின் மார்பகப் பால்கோளத்தின் உட்சுவருக்குள் ஓடிவந்து நிற்கின்றனவாம். சுரக்கும் பாலோடு, சுற்றுலா கிளம்பும் அவை குழந்தையின் வயிற்றுக்குள் போய், அதே காவல் காக்கும் வேலையைச் செய்யத் துவங்குகின்றன. அதிசயங்கள் நிகழ்த்தும் அறிவியலும், ‘எப்படிய்யா இது நடக்குது?’ என வியக்கிறதே தவிர, காரணத்தைக் கண்டறியவில்லை. அதனால்தான் புட்டிப்பாலில் குழந்தைக்கு வரும் பேதி நோய், தாய்ப்பாலால் வருவது இல்லை. எனவே, பால் சுரக்கவில்லை என்றால், படாரென புட்டிப்பாலுக்குத் தாவிவிட வேண்டாம்.

சதாவரி லேகியம், வெந்தயக் களி, பூண்டுக் குழம்பு, சுறாப்புட்டு, குடம்புளியில் சமைத்த மீன் குழம்பு இவற்றுடன் காலையில் ராகி தோசையும் மதியம் குழியடிச்சான் சம்பா அரிசியும், இரவில் கம்பு ரொட்டியும் சாப்பிடுங்கள். இவை அத்தனையும் பால் பெருகச் செய்யும் அருமருந்துகள்.

Leave a Reply