பாலக்கீரை – கார்ன் சான்விச்

குழந்தைகளுக்கு விருப்பமான சத்தான பாலக்கீரை – கார்ன் சான்விச் எப்பிடி செய்வது என்று பார்ப்போமா ..?
தேவையான பொருட்கள் :
பாலக்கீரை – 1 கப்

கார்ன் – 1/2 கப்

ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்

பூண்டு பல் – 5

கோதுமை பிரட் – 4 ஸ்லைஸ்

உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு
செய்முறை :
* பாலக்கீரையை வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும். 
* சோளத்தை வேக வைத்துக் கொள்ள வேண்டும். 
* பூண்டை நசுக்கி ஆலிவ் ஆயிலுடன் கலந்து வைத்து கொள்ளவும். 
* ஒரு கிண்ணத்தில் பூண்டு சேர்த்த ஆலிவ் ஆயில், வேக வைத்த பாலக்கீரை, சோளம்த, சிறிது உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 
* இந்த கலவையை பிரட்டிற்கு நடுவில் வைத்து பிரட் டோஸ்டரில் வைத்து டோஸ்ட் செய்து சாஸசுடன் பரிமாறவும்.
* சுவையான சத்தான சத்தான பாலக்கீரை – கார்ன் சான்விச் ரெடி.

Leave a Reply