பயறு & இனிப்புச் சுண்டல் 

பயறு & இனிப்புச் சுண்டல் செய்யும் இலகுவான முறை…
(முழுப்பயறு) பச்சைப் பயறு & 250 கிராம் வெல்லம் & 250 கிராம் ஏலக்காய் & 6 நெய் & 4 தேக்கரண்டி
முழுப்பயறை வாணலியில் லேசாக சூடு வரும் வரை வறுக்கவும். பிறகு பயறு மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு குக்கரில் வேக வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து அரைத்தம்ளர் தண்ணீர் விட்டு வெல்லத்தைப் பொடித்துப் போடவும்.
வெல்லம் கரைந்து கொதித்து கெட்டிப் பாகாக ஆனதும், குக்கரில் வேக வைத்துள்ள பயறை & (தண்ணிரை வடியவிட்டு) எடுத்துப் போடவும். பயறை கரண்டியால் நன்றாக மசித்துக் கொண்டே கிளறவும். ஏலத்தைப் பொடித்துப்போட்டு, நெய்யை ஊற்றி, சுருண்டு வந்ததும் கிளறி இறக்கி வைக்கவும்.

Leave a Reply