நெல்லிக்காய் துவையல்

​சுவையான சத்தான நெல்லிக்காய் துவையல்  எப்பிடி செய்வது என்று பார்ப்போமா .?
தேவையான பொருட்கள் : 
பெரிய நெல்லிக்காய் – 10, 

தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், 

காய்ந்த மிளகாய் – 4, 

உப்பு – தேவையான அளவு.
தாளிக்க: 
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், 

கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு, 

பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், 

எண்ணெய் – சிறிதளவு.  
செய்முறை: 
* பெரிய நெல்லிக்காயை கொட்டை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். 
* மிக்சியில் நறுக்கிய நெல்லிக்காய், தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். 
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் போட்டு தாளித்து துவையலில் சேர்த்துப் பயன்படுத்தவும்.
* சுவையான சத்தான நெல்லிக்காய் துவையல் ரெடி.

Leave a Reply