நல்வாழ்வு

​பல வருடங்கள் முயன்றும் நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்க முடியவில்லையா ?
அது வீடு, கார் அல்லது எத்தனை விலையுயர்ந்த பொருளாக வேண்டுமானாலும் இருக்கட்டும் .
என் உறவினரைக் காண மருத்துவமனைக்குச் சென்றபோது கண்டது . 
ஒரு கட்டிலில் மாற்றுச் சிறுநீரகத்திற்காக ஒரு 20 வயது இளம்பெண் .
மற்றொரு கட்டிலில் ஆபரேஷன் தாங்கமுடியாமல் டியாலிசிஸ் செய்துகொள்ளும் 70 வயது பெரியவர் 
இருவருக்குமே பணத்துக்கும் , வசதிக்கும் குறைவில்லை .
இந்தக் காட்சியைப் பார்க்க எனக்கு என் உயிரே வலிப்பது போல இருந்தது .
வீடு , கார் போன்ற அசையாத சொத்துக்களை நாம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் .

இல்லையென்றாலும் வாடகைக்கு எடுக்கலாம் .
ஆனால் ஆரோக்கியம் ?????
இளம் பெண் , பெரியவர் இவர்களின் நிலையை நினைத்துப் பார்த்தால் நமக்குக் கிடைக்கவில்லையே என்று ஏங்குகின்ற பொருட்களின் மீதான பற்று நம்மை அறியாமல் ஓடிவிடும் .
நம் உணவில் கொண்டுவரும் சிறிய மாற்றங்கள் கூட பெரிய நல்விளைவுகளை ஏற்படுத்தலாம் .

நாம் தேட வேண்டியது ஆரோக்கியமான நல்வாழ்வு மட்டுமே !

Leave a Reply