தென்னம் பூ

தென்னையின் பூ வயிற்று கோளாறுகளை சரிசெய்யும்

தென்னையின் பூ சிறுநீரை பெருக்கும். உடலின் வெப்பத்தை அகற்றும் தன்மை கொண்டது. மேலும் இது உடலை வலிமையுடையதாக்கும்.

இளம் தென்னங்குருத்தை தின்று வந்தால் சளி நீங்கும்.

இரத்த மூலம் தீரும்.

தென்னம் பூவை இடித்து சாறு பிழிந்து 150 மிலியுடன் அதே அளவு எலுமிச்சை சாறு பிழிந்து கொடுத்து வந்தால் ரத்தபேதி, சீதபேதி, வயிற்றுக்கடுப்பு, நீர்ச்சுருக்கு தீரும்.

தென்னம்பூ ஒரு பிடியை வாயிலிட்டு மென்று தின்றுவர வெள்ளைபடுதல், உட்காய்ச்சல், ரத்தவாந்தி, உடல் கொப்புளம் ஆகியவை தீரும்.

வெடிக்காத தென்னம் பாளையில் உள்ள பிஞ்சுகளை பசும்பால் விட்டு அரைத்து எலுமிச்சை அளவு எடுத்து காய்ச்சிய பாலில் கலக்கி காலை மாலை 48 நாட்கள் கொடுக்க நரம்புத்தளர்ச்சி, விரைவாதம், தாதுநீர்த்து போயிருப்பது போன்றவை நீங்கி உடல் பலமாகும்.

இளந் தென்னங்காய் மட்டையை இடித்து பிழிந்த நீரை (சுமார் 100 மிலி) நாள்தோறும் காலையில் குடித்து வர மிகையாக சிறுநீர் கழிவது, மதுமேகம்(சர்க்கரை), வயிற்றுக்கடுப்பு, மூலம் குணமாகும்.

முற்றிய தேங்காயை துருவி விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் இரவில் கட்டில் வர விதை வீக்கம் கரையும். மார்பகத்தில் கட்டி வந்தால் பால் சுரப்பு நின்று விடும்.

தென்னம் பூவை மென்று சாப்பிட்டு வந்தால் வெள்ளைபடுதல் நோய் குறையும்.

 

Leave a Reply