தூத்பேடா

​குழந்தைகளுக்கு பிடித்தமான தூத்பேடாவை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். எப்படி என்று கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பால் – 1 லிட்டர்

பட்டர் – 2 ஸ்பூன்

சீனி – 1 கப்

கார்ன் ஃப்ளார் – 11/2 டேபிள் ஸ்பூன்

பிஸ்தா பருப்பு – 25

பாதாம் பருப்பு – 10
செய்முறை :
* பிஸ்தா பருப்பை தின் ஸ்லைசுகளாக துருவிக் கொள்ளவும். 
* பாதாம் பருப்பை இரண்டாக நறுக்கி வைக்கவும்.
* ஒரு அடி கனமான வாயகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் நன்கு கொதிக்கத் தொடங்கியதும் அடுப்பைக் குறைத்து வைக்கவும். பால் முழுவதும் சுண்டி ஏடு வர ஆரம்பிக்கும் சமயம் சீனியைப் போடவும். 
* சீனி கரைந்ததும் கார்ன் ஃப்ளாரைப் போட்டு நன்கு கிளறவும். 
* நன்கு கெட்டியான பதம் வரும் போது பட்டரை போட்டு அடுப்பிலிருந்து இறக்கி உருண்டைகள் பிடித்து அதன் மேல் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பை தூவினால் அருமையான தூத்பேடா தயார்.

Leave a Reply