தட்டை பயறு

இந்த கருப்பு நிற கண்களை கொண்ட பயறுகளில் கலோரிகளும் கொழுப்புகளும் குறைவாகவே உள்ளது. அதனால் உடல் எடையை குறைக்கும் டையட் திட்டத்தில் சேர்ப்பதற்கான சிறந்த உணவாக இது விளங்குகிறது. தட்டை பயறுகளில் நார்ச்சத்து வளமையாக உள்ளதால், உடல் எடையை குறைக்க இது முக்கிய பங்கை வகிக்கிறது. அதற்கு காரணம் இதனை உட்கொள்ளும் போது, நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்த உணர்வை அளிக்கும்.
தட்டை பயறுகளில் அதிகளவிலான நார்ச்சத்தும், புரதமும் அடங்கியுள்ளது. இதனால் உங்கள் வயிறில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, செரிமான செயல்முறைக்கு உதவிடும். நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கி, வயிற்று சுகவீனம் சரியாகி, உணவுகள் செரிக்க உதவிடும்.
தட்டை பயறுகளில் புரதச்சத்து அதிகமாக உள்ளதால் சருமத்தை சீர் செய்யும் செயல்முறையை தூண்டி விட்டு, ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க இது உதவும். தட்டை பயறுகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி இருப்பதால் தான் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் நிறைந்துள்ளது. இதனால் இயக்க உறுப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, உங்கள் சரும அணுக்களை தட்டை பயறுகள் காக்கும்.

Leave a Reply