தட்டப்பயறு சுண்டல்

பரிமாறும்அளவு – 2 நபருக்கு

தேவையான பொருள்கள் –
தட்டப்பயறு – 1/2 கப் (100 கிராம்)
தேங்காய் துருவல் – 3 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

தாளிக்க –
நல்லெண்ணெய் – 4 மேஜைக்கரண்டி
காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
மிளகாய் வத்தல் – 2
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை

முதலில் தட்டப்பயறை நன்றாக கழுவி தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து குக்கரில் 3 விசில் வரை வைத்து வேக வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல், காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். பிறகு கடுகு போடவும்.

கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, தட்டப்பயறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். காபி, டீயுடன் பரிமாறவும்.

Leave a Reply