டீடாக்ஸ் ஜூஸ்

டீடாக்ஸ் ஜூஸ்!

தேவையானவை: கறிவேப்பிலை, கொத்தமல்லி – தலா ஒரு கைப்பிடி,  புதினா – கால் கைப்பிடி, தோல் நீக்கி நறுக்கிய இஞ்சி – சிறிதளவு, எலுமிச்சை – 1/2 பழம், உப்பு அல்லது தேன் – தேவையான அளவு.
செய்முறை: எலுமிச்சையைச் சாறு எடுத்து, தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி ஆகியவற்றோடு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, மிக்‌ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டாமல் ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். இதனுடன், எலுமிச்சைச் சாறு  மற்றும் தேவைப்பட்டால் உப்பு  அல்லது தேன் சேர்த்துப் பருகலாம்.
பலன்கள்
கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினாவில் வைட்டமின் ஏ சிறிதளவும், உடலுக்கு ஊட்டமளிக்கும் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸும் உள்ளன. எலுமிச்சைச்  சாறு சேர்க்கப்படுவதால், வைட்டமின் சி கிடைக்கும்.
பல்வேறு விதமான ஆன்டிஆக்ஸிடன்ட் இந்த ஜூஸில் இருந்து கிடைக்கும்.
மிட் மார்னிங் எனப்படும் காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட வேளையில், இந்த  ஜூஸைக் குடிப்பது நல்லது.
குழந்தைகளுக்கு, தேன் அல்லது வெல்லம் போன்றவை சேர்த்துக் கொடுப்பது நல்லது. வெல்லம் சேர்க்கும்போது, குழந்தைகளுக்கு இரும்புச்சத்து கிடைக்கும்.
சர்க்கரை நோயாளிகள் தேன், உப்பு போன்றவற்றைத் தவிர்த்துப் பருகுவது நல்லது. சிறுநீரக நோயாளிகள் உப்பு தவிர்த்து, தேன் சேர்த்துப் பருக வேண்டும்.
சிறந்த டீடாக்ஸ் ட்ரிங்க் இது. வடிகட்டிப் பருகினால், சத்துக்கள் பெருமளவு குறைந்துவிடும். எனவே, வடிகட்டாமல் குடிப்பதே நல்லது.
மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்ள‍வும்.
tq:dv

Leave a Reply