சோமாசி

​சூப்பரான ஸ்நாக்ஸ் தினையரிசி சோமாசி செய்யும் முறை ..?
தேவையான பொருட்கள் :
தினையரிசி- 200 கிராம், 

மைதாமாவு – 200 கிராம, 

நெய் – 2 டேபிள் ஸ்பூன், 

உப்பு – 1 சிட்டிகை 
பூரணத்திற்கு : 
நாட்டுச்சர்க்கரை – ½ கப், 

கசகசா -1 ஸ்பூன், 

உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய்த்தூள், கொப்பரைத்துருவல் – 1 டேபிள் ஸ்பூன். 

சிறிதளவு பச்சை கற்பூரம்.
செய்முறை :
* திணையரிசியை வறுத்து அதை மிக்சியில் போட்டு அரைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். 
* பின் அதனுடன் நாட்டுச்சர்க்கரையை கலந்து சிறிதளவு ஏலக்காய் பொடியை தூவி பிசைந்துகொள்ளவேண்டும். 
* முந்திரி, திராட்சையை தனியாக நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 
* பின் அதை திணையரிசி நாட்டுச்சர்க்கரை கலவையில் சேர்த்து பிசைந்து அதனுடன் கொப்பரைத்துருவலையும் சேர்த்துக்கொண்டால் பூரணம் ரெடி.
* மைதாமாவில் சிறிதளவு உப்பு, கசகசா, நெய் சேர்த்து தண்ணீர் ஊற்றி கெட்டி பதத்திற்கு பிசைந்துகொண்டு, அதை சிறிய உருண்டைகளாக்கி பின் அதை தட்டையாக ஒரு அப்பளம் போல் தட்டி அதன் நடுவே செய்துவைத்திருக்கும் பூரணத்தை கொஞ்சம்போல வைத்து ஓரங்களை மடித்து மூடிவிடவேண்டும். 
* கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் செய்து வைத்துள்ள சோமாசிகளை காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் திணையரிசி சோமாசி தயார்.

Leave a Reply