சிவப்பு அவல் சப்பாத்தி

​உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற சுவையான சத்தான சிவப்பு அவல் சப்பாத்தி செய்யும் முறை .?
தேவையான பொருட்கள் : 
சிவப்பு அவல் – முக்கால் கப், 

கோதுமை மாவு – 1 கப், 

சற்று புளித்த தயிர் – 1 கப், 

மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், 

கரம் மசாலா (விரும்பினால்) – அரை டீஸ்பூன், 

சீரகம் – அரை டீஸ்பூன், 

உப்பு – தேவைக்கு, 

எண்ணெய் அல்லது நெய் – தேவைக்கு.
செய்முறை : 
* அவலைச் சுத்தம் செய்து, அதனுடன் தயிர், சிறிதளவு உப்பு சேர்த்து பிசறி ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். 
* 1 மணிநேரம் கழித்த பிறகு அதனுடன் கோதுமை மாவு, மிளகாய்த் தூள், உப்பு, சீரகம், சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
* இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்திகளாகத் தேயுங்கள். 
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சாப்பாத்திகளை போட்டு சுற்றி எண்ணெய் அல்லது நெய் விட்டுச் சுட்டெடுங்கள்.
* சுவையான சத்தான சிவப்பு அவல் சப்பாத்தி ரெடி.
* வழக்கமாக சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ளும் அனைத்து சைடு டிஷ்களும் இதற்கும் பொருந்தும். அதிலும் குறிப்பாக கெட்டி பருப்புக் கலவை பெஸ்ட் காம்பினேஷன்.

Leave a Reply