சித்தரத்தை பால்

வயதானவர்களுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு சிறந்த மருந்து இந்த சித்தரத்தை பால். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சித்தரத்தை – 50 கிராம்

ஏலக்காய் – 10 கிராம்

திப்பிலி – 20 கிராம்

சுக்கு – 10 கிராம்

பால்  – சிறிதளவு

தண்ணீர் – 100 மி.லி

பனங்கற்கண்டு – சுவைக்கு
செய்முறை:
* வாணலியில் அனைத்து பொருட்களையும் கொட்டி லேசாக வறுத்து, ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடி செய்யவும்.
* 00 மி.லி. நீரில் கொதிக்க வைத்து அதில் சித்தரத்தை பொடியை ஒரு தேக்கரண்டி போட்டு வடிகட்டவும்.
* வடிகட்டிய நீரில் சிறிது பால், பனங்கற்கண்டு கலந்து பருகலாம்.
* வயதானவர்களுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு சிறந்த மருந்து. உடல் வலி கட்டுப்படும்

Leave a Reply